தமிழக ரயில் பயணிகளுக்கான ஹாப்பி நியூஸ் – மீண்டும் 34 ரயில் சேவைகள் துவக்கம்!

0
தமிழக ரயில் பயணிகளுக்கான ஹாப்பி நியூஸ் - மீண்டும் 34 ரயில் சேவைகள் துவக்கம்!
தமிழக ரயில் பயணிகளுக்கான ஹாப்பி நியூஸ் - மீண்டும் 34 ரயில் சேவைகள் துவக்கம்!
தமிழக ரயில் பயணிகளுக்கான ஹாப்பி நியூஸ் – மீண்டும் 34 ரயில் சேவைகள் துவக்கம்!

கொரோனா காலகட்டத்தின் போது நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் சேவைகள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் 34 ரயில் சேவையை துவங்க உள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரயில் சேவைகள்:

தமிழகத்தில் கொரோனா பரவலின் போது சில முக்கிய ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. கொரோனா பரவல் குறைந்து மீண்டும் ரயில் சேவைகளை பழையபடி கொண்டு வர மக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது மீண்டும் 34 ரயில்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது, ரயில் எண் 06405 / 06409 கொண்ட திருச்செந்தூர் – திருநெல்வேலி – திருச்செந்தூர் செல்லும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் (தினசரி), ரயில் எண் 06663 / 06664 கொண்ட மதுரை – செங்கோட்டை – மதுரை முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் (தினசரி), ரயில் எண் 06681 / 06658 திருநெல்வேலி – செங்கோட்டை – திருநெல்வேலி செல்லும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் (தினசரி), ரயில் எண் 06684 / 06687 கொண்ட செங்கோட்டை – திருநெல்வேலி – செங்கோட்டை செல்லும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய ரயில்கள் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

இதனையடுத்து ரயில் எண் 06809 / 06810 கொண்ட திருச்சி – ஈரோடு – திருச்சி செல்லும் முன்பதிவில்லா ரயில் (தினசரி) மற்றும் ரயில் எண் 06611 / 06612 கொண்ட திருச்சி – ஈரோடு – திருச்சி செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (தினசரி) ஆகிய ரயில்கள் வரும் ஜூலை 9 ஆம் தேதி முதல் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், ரயில் எண் 06401 / 06402 கொண்ட அரக்கோணம் – கடப்பா – அரக்கோணம் செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் MEMU எக்ஸ்பிரஸ் ரயில் வரும் ஜூலை 27ஆம் தேதி முதல் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயில் எண் 06831 / 06838 கொண்ட சேலம் – கரூர் – சேலம் செல்லும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சனிக்கிழமை தவிர மீதமுள்ள 6 நாட்கள் வரும் ஜூலை 18ஆம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள வாகன ஓட்டிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல் – அமைச்சர் விளக்கம்!

ரயில் எண் 06802 / 06803 கொண்ட கோவை – சேலம் – கோவை முன்பதிவில்லா MEMU எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை தவிர மீதமுள்ள 6 நாட்களும், ரயில் எண் 06881 / 06882 கொண்ட திருச்சி – கரூர் – திருச்சி செல்லும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை தவிர மீதமுள்ள 6 நாட்களும், ரயில் எண் 06821 / 06822 கொண்ட சேலம் – கரூர் – சேலம் செல்லும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் சனிக்கிழமை தவிர மீதமுள்ள 6 நாட்களும் வரும் ஜூலை 27 ஆம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் எண் 16847 / 16848 கொண்ட மயிலாடுதுறை – திண்டுக்கல் – மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மயிலாடுதுறையில் இருந்து ஜூலை 11ஆம் தேதியும், திண்டுக்கல்லில் இருந்து ஜூலை 12 ஆம் தேதியும் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!