தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இலவச சீருடை விநியோகம்!

0
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இலவச சீருடை விநியோகம்!
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இலவச சீருடை விநியோகம்!
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இலவச சீருடை விநியோகம்!

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகள் பள்ளிகளிலேயே நேரடியாக விநியோகம் செய்யப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இலவச சீருடை:

தமிழகத்தில் அரசு பள்ளிகள் மூலம் மாணவர்களுக்கு இலவசமாக கல்வி வழங்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு சார்பாக இலவச பாட புத்தகங்கள், மதிய உணவு, எழுது பொருட்கள், புத்தகப் பை, உயர் நிலை பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி, மடிக்கணினி போன்றவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பரவல் காரணத்தால் விதிக்கப்பட்ட ஊரடங்கு போன்றவற்றால் ஏற்பட்ட பொருளாதார சரிவால் சாமானிய பெற்றோர்களால் கல்வி கட்டணம் செலுத்த இயலவில்லை.

Exams Daily Mobile App Download

அதனால் தங்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வந்தனர். மேலும் அரசின் இலவச திட்டங்கள் மற்றும் மேற்கொண்ட பிற முயற்சிகளின் காரணத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் அதிகரித்தது. கடந்த ஆண்டுகளை விட நடப்பு கல்வியாண்டில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனையடுத்து அரசு மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஒவ்வொரு நல திட்டங்களாக அறிவித்து வருகிறது. அந்த வகையில் உயர் கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசு பள்ளியில் படித்து கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் 3% அகவிலைப்படி உயர்வு? வலுக்கும் கோரிக்கை!

இந்த நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச சீருடைகள் பள்ளிகளில் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில் 2022 – 2023 ம் கல்வியாண்டில் மாணவர்களுக்கான சீருடைகளை நேரடியாக பள்ளிகளிலேயே விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் பள்ளியின் முகவரி, மாணவர்கள் எண்ணிக்கை விவர பட்டியலை மே 18-க்குள் மின்னஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச கல்வி உபகரணப் பொருட்களையும் பள்ளிகளிலேயே நேரடியாக விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!