தமிழக விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ் – அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாட்டில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த திட்டம் தொடர்பாக மற்றொரு முக்கிய அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
முக்கிய அறிவிப்பு:
அண்மையில் சட்டப்பேரவையில் தொழில்துறை, மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மீதான விவாதம் நடைபெற்றது. பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது பதிலுரையில் நாட்டில் பல மாநிலங்களில் மின்வெட்டு இருப்பதை சுட்டிக்காட்டினார். நிலக்கரி பற்றாக்குறை இருந்தாலும், முதலமைச்சரின் பொற்கால ஆட்சியில் தமிழ்நாட்டில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்தார். நலிவடைந்த மின் உற்பத்தி நிலையங்களை குறைந்த விலையில் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறைவான திறன் உடைய மின் நிலையங்கள் அதிக திறனுள்ள மின் நிலையங்களாக தரம் உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார்.
Exams Daily Mobile App Download
இதைத்தொடர்ந்து மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள், சாலையோர துணை மின் நிலையங்களில் நிறுவப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 1,649 கோடியில் ரூபாயில் 100 புதிய துணை மின் நிலையங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் விவசாய உற்பத்தியை பெருக்கவும் விளைநிலங்களின் பரப்பை அதிகரிக்கும், விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்கத்தில் நடப்பு நிதி ஆண்டில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய விவசாய மின் இணைப்பு இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தார்.
Amazon நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!
இந்தத் திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என விவசாயிகள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் இன்னும் 60 நாட்களில் செயல்படுத்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 6,220மெகாவாட் மின் உற்பத்திக்கு திட்டங்கள் தொடங்கப்பட உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.