சன் டிவி “கோலங்கள்” சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மீண்டும் “கலர்ஸ் தமிழ்” சேனலில் ஒளிபரப்பு!

0
சன் டிவி
சன் டிவி "கோலங்கள்" சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - மீண்டும் "கலர்ஸ் தமிழ்" சேனலில் ஒளிபரப்பு!
சன் டிவி “கோலங்கள்” சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மீண்டும் “கலர்ஸ் தமிழ்” சேனலில் ஒளிபரப்பு!

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் வெற்றி பெற்றுள்ளனர். அந்த வகையில் சன் டிவியில் பிரபலமான சீரியலான கோலங்கள் சீரியலை நாம் அனைவரும் மறந்திருக்கமாட்டோம். 90’ஸ் கிட்ஸ் விருப்பமான சீரியல் தற்போது கலர்ஸ் தமிழ் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகி வருகிறது.

கோலங்கள் சீரியல்:

சன் தொலைக்காட்சியில் 2003 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை தேவயானி நடிப்பில் உருவான மெகா தொடர் கோலங்கள். இந்த சீரியல் 90’ஸ் கிட்ஸ் காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்தது. இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி இருந்தார். சன் டிவியில் வெற்றி பெற்ற சீரியல் வரிசையில் இந்த சீரியல் முக்கிய பங்கை பிடித்துள்ளது. இதன் இரண்டாம் பாகம் கூட உருவாக உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகின. ஆனால் அந்த திட்டம் செயல்படுத்த முடியவில்லை.

Exams Daily Mobile App Download

இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக சீரியலில் நடித்த பிரபல நடிகை தேவயாணி இருந்தார். அவரை பார்ப்பதற்கே ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். சின்னத்திரையில் அவர் இந்த சீரியல் மூலமாக தான் என்ட்ரி கொடுத்தார். கோலங்கள் சீரியல் 1500-க்கும் மேற்பட்ட எபிசோடுகளுடன் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த சீரியல் உடன் தென்றல் சீரியலும் ஒளிபரப்பி வந்தது. அந்த சீரியலுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர்.

செயற்கை முறை கருவுறுதலில் தோல்வியடைந்த முல்லை – அதிர்ச்சியில் குடும்பத்தினர்கள்! ப்ரோமோ ரிலீஸ்!

இந்த இரண்டு சீரியல்களையும் விகடன் நிறுவனம் தான் தயாரித்து இருந்தது. இந்நிலையில் ரசிகர்களின் ஆசைக்கு இணங்க இந்த இரண்டு சீரியல்களும் மீண்டும் கலர்ஸ் தமிழ் சீரியலில் ஒளிபரப்பாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சீரியல்களை பார்க்க 90’ஸ் கிட்ஸ் ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர். பல பிரபலமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் இது போல வெற்றி அடைந்த சீரியல்களை பார்க்க ரசிகர்கள் குறையாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!