பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 14 நாட்களுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு?

0
பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - 14 நாட்களுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு?
பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - 14 நாட்களுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு?
பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 14 நாட்களுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு?
நாடு முழுவதும் மக்கள் கொரோனா எனும் கொடிய வகை வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு தற்போது தான் இயல்பு நிலையை நோக்கி திரும்பி வருகின்றனர். அதே நேரம் பள்ளிகளும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மைசூர் மாவட்ட பள்ளிகளுக்கு 14 நாட்கள் பண்டிகை கால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை:

நாடு முழுவதும் கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் கோரத்தாண்டவம் எடுத்த கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நேரத்தில் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது. அப்போது மாற்று முறையாக மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடம் நடத்தப்பட்டது. ஆனால் இந்த கற்றல் முறை எந்த அளவுக்கு விளைவை ஏற்படுத்தும் என்பது கேள்விக்குறியாக இருந்தது. அதனால் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகளை நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் தடுப்பூசி மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தொற்று எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் 2022 ம் ஆண்டின் தொடக்கத்தில் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது வழக்கம் போல பள்ளிகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் வரும் நாட்களில் பண்டிகைகள் மற்றும் காலாண்டு தேர்வை முன்னிட்டு பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை அளிக்கப்பட உள்ளது. அந்த வகையில் கர்நாடகாவில் தசரா பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மைசூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 9 வரை அரசு விடுமுறையை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வேகமெடுக்கும் பன்றி காய்ச்சல்! பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை? – அமைச்சர் தகவல்!

Exams Daily Mobile App Download

இது தொடர்பாக பெங்களூர் பொதுக் கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கர்நாடகாவில் அக்டோபர் 3 முதல் 16 வரை மாநிலத்தில் பள்ளிகளுக்கு தசரா விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. . இருந்தாலும் அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அப்பகுதிகளின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப விடுமுறைகளை அறிவித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!