பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வாரந்தோறும் 2 நாட்கள் விடுமுறை! பங்களாதேஷ் அரசு உத்தரவு!

0
பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - வாரந்தோறும் 2 நாட்கள் விடுமுறை! பங்களாதேஷ் அரசு உத்தரவு!
பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - வாரந்தோறும் 2 நாட்கள் விடுமுறை! பங்களாதேஷ் அரசு உத்தரவு!
பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வாரந்தோறும் 2 நாட்கள் விடுமுறை! பங்களாதேஷ் அரசு உத்தரவு!

கொரோனா காரணமாக கடந்த 2 வருடங்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்து, மேலும் தடுப்பு நடவடிக்கையின் பேரில் நோய் தாக்கம் குறையத் தொடங்கியது. இதை தொடர்ந்து கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மின்சாரத்தை மிச்சப்படுத்த வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது.

அரசு அதிரடி உத்தரவு:

நாட்டில் வெப்ப அலை அதிகரித்துள்ளதன் காரணமாக மின்சாரத் தேவையும் அதிகரித்துள்ளது. அதே வேளையில், நிலக்கரித் தட்டுப்பாடு, அனல் மின் நிலையங்களில் உற்பத்தி பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் மின்சார உற்பத்தி குறைந்தது. அதன் காரணமாக பல மாநிலங்கள் மின்வெட்டு பிரச்னையைச் சந்தித்து வருகின்றன. இந்த வகையில் அண்டை நாடான வங்க தேசம், தற்போது மின்சார பற்றாக்குறையால் திணறும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் மின்வெட்டு நிலவி வருகிறது. இதையடுத்து இந்த நிலையை எதிர்கொள்ளும் விதமாகவும், மின்சாரத்தை மிச்சப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக, பள்ளி, கல்லூரிகளை வாரம் 5 நாட்கள் மட்டுமே இயங்க செய்யவும், சனி, ஞாயிறு என 2 நாட்கள் விடுமுறை விடவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அதாவது பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இந்தத் தகவலை, அமைச்சரவை செயலாளர் கண்டாகேர் அன்வருல் இஸ்லாம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் இந்த உத்தரவின் பேரில் நாளை முதல் அனைத்து அரசு, தன்னாட்சி அலுவலகங்களும் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை செயல்படும் என்றும், வங்கிகள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கும் என்றும், மின்சார பயன்பாட்டை குறைத்துக் கொள்ளும் படி அனைத்து அலுவலகங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளதாகவும் அமைச்சரவை செயலாளர் அன்வருல் இஸ்லாம் தெரிவித்து உள்ளார்.

TNPSC Group 5A தேர்வு அறிவிப்பு வெளியீடு – விண்ணப்பிக்க தகுதி என்ன? முழு விவரம் இதோ!

Exams Daily Mobile App Download

தொடர்ந்து மின்சாரத்தை மிச்சப்படுத்தும் விதமாக ஏற்கனவே, கடைகள், வணிக வளாகங்களை இரவு 8 மணிக்கு மூடி விடும்படி வங்கதேச அரசு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக, வங்கதேச நாட்டின் கல்வித் துறை அமைச்சர் திபு மோனி, “உலகளாவிய மின் நெருக்கடி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் பள்ளிகளுக்கு மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அதிகளவில் எரிபொருளைச் செலவழிக்கின்றன. பள்ளியில் படிக்கும் நாட்களைக் குறைப்பதன் மூலம் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க முடியும்” என்றார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!