
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – செப்டம்பர் 3 முதல் ஓணம் விடுமுறை! கேரளா அரசு அறிவிப்பு!
ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓணம் விடுமுறைக்கு முன்னதாக ஆசிரியர்கள் மீதமுள்ள பாடப்பகுதிகளை முடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓணம் விடுமுறை:
கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கேரளா மட்டுமில்லாது தமிழகத்திலும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் மகாபலி மன்னர் தன் மக்களை வந்து பார்க்க வருவார் என்பது மக்களின் ஐதீகம். இந்த பண்டிகை கேரளாவில் மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் தொடர்ச்சியாக 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை நாட்களில் மகாபலி சக்கரவர்த்தி மன்னரை வரவேற்கும் வண்ணம் அனைவரது வீட்டு வாசலிலும் பூக்களால் கோலமிட்டு அலங்கரிப்பர். அன்றைய தினம் பாரம்பரிய உடை அணிந்தும் பல வகையான உணவுகளை உண்டும் மக்கள் மகிழ்வர்.
கடந்த 2 வருடங்களாக கொரோனா பெருந்தொற்று காரணமாக ஓணம் பண்டிகை பல கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்துள்ளதால் ஓணம் பண்டிகையை மிக சிறப்பாக கொண்டாட கேரள அரசு முடிவு செய்துள்ளது. எனவே அதன்படி செப்டம்பர் 6 ஆம் தேதி கனகக்குன்னு அரண்மனை மைதானத்தில் உள்ள நிஷா காந்தி திறந்தவெளி அரங்கில் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த பிரம்மாண்ட விழாவில் முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொள்ள இருக்கிறார்.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை – வானிலை மையம் அறிக்கை!
இந்த பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளா முழுவதும் ஆகஸ்ட் 20ம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என பொதுக் கல்வித் துறை தெரிவித்தது. மேலும் ஓணம் விடுமுறைக்கு முன்னதாக ஆசிரியர்கள் நிலுவையில் உள்ள பாடப்பகுதிகளை முடிக்க வேண்டும் என்பதால், அனைத்து பள்ளிகளுக்கும் சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம், கனமழை காரணமாக பள்ளிகள் பல நாட்கள் மூடப்பட்டன. எனவே, பெரும்பாலான பள்ளிகள் முதல் பருவத் தேர்வுக்கு முன் நிலுவையில் உள்ள பாடத்திட்டத்தை முடிக்க வேண்டும். மேலும் மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு ஆகஸ்ட் 24-ம்(நாளை மறுநாள்) தேதி தொடங்குகிறது என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்