சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இன்று மாலை நடை திறப்பு!

0
சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இன்று மாலை நடை திறப்பு!
சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இன்று மாலை நடை திறப்பு!
சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இன்று மாலை நடை திறப்பு!

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று ஆடி மாத பூஜைக்காக நடை திறக்கப்பட உள்ளது. இதில் பக்தர்கள் கலந்து கொள்ள முன்பதிவு செய்ய வேண்டியது அவசியமானதாகும். மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன்

கேரள மாநிலத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். அதனால் கொரோனா கால கட்டத்தில் பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஆனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

பொதுவாக சபரி மலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை 60 நாட்கள் மண்டல , மகர விளக்கு பூஜைகளுக்காக கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இதை தவிர ஒவ்வொரு தமிழ் மாதம் பிறக்கும் முதல் ஐந்து நாட்கள் கோவில் நடை திறக்கப்படும். அதன்படி ஆடி மாதம் பிறந்ததை முன்னிட்டு கடந்த ஜூலை 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை என 5 நாட்கள் கோவிலில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து இன்று ஆடி பெருக்கு திருவிழாவை முன்னிட்டு மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட உள்ளது.

தமிழகத்திற்கு இன்றும், நாளையும் ‘ரெட் அலர்ட்’ – இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

மேலும் தற்போது கேரள மாநிலம் முழுவதும் கனமழை பெய்து கொண்டு வருகிறது. அதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் ஏற்படுகிறது. அதனால் ஐயப்பன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பம்பை ஆறு, நீலி மலைவழி பாதையில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அத்துடன் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு மற்றும் மலைப்பகுதிகளில் நிலச்சரிவு உள்ளிட்டவை ஏற்படுவதால் பம்பை ஆறு, நீலிமலை வழி பாதையை பயன்படுத்த தடை என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here