கிழிந்த ரூபாய் நோட்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – RBI சூப்பர் அறிவிப்பு! முழு விபரம் இதோ!

0
கிழிந்த ரூபாய் நோட்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் - RBI சூப்பர் அறிவிப்பு! முழு விபரம் இதோ!
கிழிந்த ரூபாய் நோட்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் - RBI சூப்பர் அறிவிப்பு! முழு விபரம் இதோ!
கிழிந்த ரூபாய் நோட்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – RBI சூப்பர் அறிவிப்பு! முழு விபரம் இதோ!

நாம் தினந்தோறும் பல்வேறு இடங்களில் ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி வருகின்றோம். சில இடங்களில் கவனிக்க மறந்து கிழிந்த ரூபாய் நோட்டுகளை வாங்குகின்றோம். மேலும் தற்போது ஏடிஎம் மெஷின்களில் பணம் எடுக்கும்போது சில சமயங்களில் கிழிந்த ரூபாய் நோட்டுகள் வருகிறது. தற்போது கிழிந்த ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய நோட்டுகளை மாற்றி கொள்வதற்கான வழிமுறைகளை பார்ப்போம்.

கிழிந்த ரூபாய்

நாம் சில நேரங்களில் அவசரத்தில் சரியாகக் கவனிக்காமல் கிழிந்த ரூபாய் நோட்டுகளை வாங்கி விடுகிறோம். மேலும் சில நேரங்களில் ஏடிஎம் மெஷின்களில் பணத்தை எடுக்கும்போது கிழிந்த ரூபாய் நோட்டுகள் வருகின்றன. அந்த சமயத்தில் நாம் சம்பந்தப்பட்ட வங்கிக்கு நேரில் சென்று இது தொடர்பாக படிவம் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இதில் நீங்கள் பணம் எடுத்த தேதி, நேரம் போன்ற விவரங்களைக் குறிப்பிட வேண்டும். அத்துடன் பணம் எடுத்தற்கான ரசீது, SMS உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட வேண்டியதாக இருக்கும்.

Exams Daily Mobile App Download

மேலும் இது போன்ற வேறு வகைகளில் கிழிந்த ரூபாய் நோட்டுகளை பெற்றிருந்தாலும் வங்கிகளில் இந்த கிழிந்த பணத்தை கொடுத்தும் மாற்றி கொள்ளலாம். அத்துடன் ரூபாய் நோட்டுகள் கிழிந்திருக்கும் அளவை பொறுத்து புதிய ரூபாயின் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது. இதில் மிகவும் மோசமாக கிழிந்திருந்தால் அதே மதிப்புடைய ரூபாய் நோட்டை பெற முடியாது. ஆனால் மிகவும் மோசமாக உள்ள ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் அலுவலகத்திற்கு சென்று பெற்றுக் கொள்ளலாம்.

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

மேலும் இது தெடர்பாக RBI வெளியிட்ட அறிவிப்பில், கிழிந்த நோட்டுகளை வழங்கிய சம்பந்தப்பட்ட வங்கிகள் உடனடியாக புகார் கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு அவற்றை மாற்றித் தரவேண்டும் என்று என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் எந்தவொரு வங்கியும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாது என்று மறுக்கக்கூடாது. இதனை மீறி செயல்படும் வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் வாடிக்கையாளரின் புகாரின் அடிப்படையில் அந்த வங்கிகளுக்கு ரூ.10,000 வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!