Reliance Jio பயனர்களுக்கான ஹாப்பி நியூஸ் – பல புதிய ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம்!
அவ்வப்போது ஜியோ நிறுவனம் அதிக வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பல ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
ரீசார்ஜ் திட்டங்கள்
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நெட்வொர்க் நிறுவனமாக விளங்கி வரும் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் பலவித புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி கொண்டிருக்கிறது. தற்போது ஜியோ நிறுவனம் 30 நாட்கள் வேலிடிட்டி ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. முதலில் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.181 ரீசார்ஜ் திட்டத்தில் 30ஜிபி வரையிலான டேட்டா ஆட்-ஆன் பேக்கேஜ் வழங்கப்படுகிறது. மேலும், இந்த திட்டத்தில் 64kbps வேகத்தில் இணைய சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்திய IT நிறுவனங்களில் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
இதனையடுத்து, ரூ.241 ரீசார்ஜ் திட்டத்தில் 40ஜிபி வரையிலான டேட்டா ஆட்-ஆன் பேக்கேஜ் வழங்கப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் 64kbps வேக இணைய சேவைகள் வழங்கப்படுகிறது. அடுத்ததாக 30 நாட்கள் செல்லுபடியாகும்படியான ரூ.259 ஜியோ ரீசார்ஜ் திட்டமானது தினசரி 1.5ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100SMS மற்றும் வரம்பற்ற கால் அழைப்பு வழங்கப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் மல்டிமீடியா சலுகைகளையும் வழங்குகிறது.
Exams Daily Mobile App Download
இத்துடன் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud ஆகிய சேவைகளும் வழங்கப்படுகிறது. அடுத்ததாக 30 நாட்கள் செல்லுபடியாகும்படியான ரூ.296 ஜியோ ரீசார்ஜ் திட்டத்தில் 25GB 4G டேட்டா வழங்கப்படுகிறது. அடுத்ததாக 30 நாட்கள் செல்லுபடியாகும்படியான ரூ.301 ஜியோ ரீசார்ஜ் திட்டத்தில் 50GB 4G டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் 64kbps வேக இணைய சேவைகள் மற்றும் மற்ற ரீசார்ஜ் திட்டங்களில் வழங்கப்பட்ட சேவைகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.