Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சூப்பர் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விபரம்!

0
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - சூப்பர் ப்ரீபெய்ட்
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - சூப்பர் ப்ரீபெய்ட்
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சூப்பர் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விபரம்!

ரிலையன்ஸ் ஜியோ தனது பயனர்களுக்கு புதிய போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் OTT நன்மைகள் வழங்கப்படுகிறது. அதே போல பிற திட்டங்களும் OTT நன்மைகளை அளிக்கிறது. இந்த திட்டங்கள் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.

ஜியோ:

பிரபல நெட் ஒர்க் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் எப்போதும் தனது பயனர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. அண்மையில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை 25% வரை உயர்த்தியது. அதனால் அடிப்படை திட்டமான ஜியோவின் ரூ.129 திட்டம் ரூ.155 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஜியோவின் ரூ.199 திட்டம் ரூ.239 ஆக உயர்ந்துள்ளது. ரூ.249 திட்டம் ரூ.299 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ.399 ரீசார்ஜ் திட்டம் ரூ.479 ஆக உயர்த்தப்பட்டது.

மாதாந்திர திட்டங்களை தொடர்ந்து வருடாந்திர ரீசார்ஜ் பிளான்களின் விலையும் உயர்த்தபட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது படங்கள் OTT தளங்களில் வெளியிடப்பட்டு வருவதால் OTT தளத்திற்கான பயன்பாடு அதிகரித்துள்ளது. ஜியோ OTT நன்மைகளை அளிக்கும் வகையில் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ரூ.399 திட்டத்தில் 75 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அனைத்து நெட்வொர்களுக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு, தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகிய சலுகைகள் வழங்கப்படுகிறது.

மேலும் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பிற ஜியோ பயன்பாடுகளுக்கு இலவச அணுகலையும் வழங்குகிறது. ஜியோவின் ரூ.499, ரூ.649 ஆகிய திட்டங்களில் OTT தலங்களுக்கு ரூ.179 செலுத்த வேண்டும். இது பல திட்டங்களில் அமேசான் பிரைமுக்கு தனி சந்தா
செலுத்த வேண்டும். மற்ற திட்டங்களை ஒப்பிடுகையில் ரூ. 399 திட்டம் சிறந்த OTT தள பயன்பாடுகளுக்கான திட்டமாக உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!