ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – அகவிலைப்படி & சம்பள உயர்வு!

0
ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் - அகவிலைப்படி & சம்பள உயர்வு!
ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் - அகவிலைப்படி & சம்பள உயர்வு!
ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – அகவிலைப்படி & சம்பள உயர்வு!

ரேஷன் கடை ஊழியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்காமல் கூட்டுறவுத்துறை அமைப்பு நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில் பல கோரிக்கைகளுக்கு பிறகு ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி 14 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு

மத்திய அரசு அவ்வப்போது பணி உயர்வு, சம்பள உயர்வு முதலான பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டு தற்போது 34 சதவீதமாக உள்ளது. ரேஷன் கடை ஊழியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி சம்பள உயர்வு எதுவும் வழங்கப்படாமல் கூட்டுறவுத்துறை அமைப்பு நிறுத்தி வைத்திருந்தது. இதனால் அவ்வப்போது ரேஷன் கடை ஊழியர்கள் அகவிலைப்படி மற்றும் சம்பள உயர்வு வழங்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

‘நான் தப்பா பேசல’ என பதிலடி கொடுத்த நடிகை சாய் பல்லவி – வைரலாகும் வீடியோ!

ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு தற்போது வரைக்கும் வழங்காதது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி ரேஷன் கடை ஊழியர்கள் முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனிடையே ஒரு மாதத்திற்குள் ரேஷன் கடை ஊழியர்களுக்கான அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடை ஊழியர்களுக்கு தற்போது வரைக்கும் 14% என்கிற கணக்கில் தான் அகவிலைப்படி சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அகவிலைப்படியை 14 சதவீதத்தில் இருந்து தற்போது 28 சதவீதமாக உயர்த்தியுள்ளது. ரேஷன் கடை ஊழியர்களுக்கான அகவிலைப்படி சம்பள உயர்வால் கிட்டத்தட்ட 19,658 விற்பனையாளர்கள், 2,852 கட்டுநர்கள் பயன்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அரசு அறிவித்துள்ள இந்த அகவிலைப்படி சம்பள உயர்வு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் கணக்கிட்டு ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here