ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் கடைகளில் சிசிடிவி கேமரா!

0
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - விரைவில் கடைகளில் சிசிடிவி கேமரா!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - விரைவில் கடைகளில் சிசிடிவி கேமரா!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் கடைகளில் சிசிடிவி கேமரா!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. அதாவது தற்போது ரேஷன் கடைகளை சிசிடிவி மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இது தவிர, ஹெல்ப்லைன் எண் அமைப்பும் முன்பை விட சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்தி:

சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில் அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த அத்தியாவசியப் பொருட்களை பயனாளிகள் மாதாந்தோறும் பெறுவதற்கு வசதியாக டிஜிட்டல் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகளை பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது இருப்பிட சான்றுக்கான முக்கிய ஆவணமாக ரேஷன் கார்டு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்நிலையில் ரேஷன் கடை செயல்முறையை முற்றிலும் மாற்ற அரசு ஆலோசித்து வருகிறது.

Exams Daily Mobile App Download

தற்போது ரேஷன் கடைகளை சிசிடிவி மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாட்டின் நாடாளுமன்ற குழு இதை பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம் ரேஷன் பொருட்களின் வழங்கலில் அதிக வெளிப்படைத்தன்மை இருக்கும். இந்நிலையில் நாடாளுமன்ற நிலைக்குழு ஜூலை 19 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. அந்த அறிக்கையில் தரம் குறைந்த உணவு தானியங்கள் குறித்து பயனாளிகளிடமிருந்து புகார்கள் பெறப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது சில இடைத்தரகர்கள் தான்.

சென்னை: மீண்டும் அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

இதனால் ஏழை மக்கள் தரம் குறைந்த பொருட்களைப் பெறுகிறார்கள். சில சமயங்களில் பயனாளிகள் தங்கள் குறைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தெரிவிக்க முடியாமல் தவிப்பதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பலமுறை அழைத்தும் தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை என தகவல்கள் கூறுகிறது. மேலும் 1967 மற்றும் 1800 என்ற தொலைபேசி எண்கள் மூலம் பல்வேறு மாநிலங்களில் 24 மணி நேரமும் குறை தீர்க்கும் முறை உள்ளது என்று குழு தெரிவித்துள்ளது. ஆனால், பயனாளிகளின் அன்றாட பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் இந்த எண்கள் மூலம் பலன் கிடைப்பதில்லை. எனவே மாநில அரசுகள் இந்த ஹெல்ப்லைன் எண்ணின் செயலாக்கத்தை வலுப்படுத்தி, ரேஷன் கடைகளை கண்காணிக்க சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என அறிக்கை பரிந்துரைத்தது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here