மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அணியில் தக்கவைக்கப்படும் 5 முக்கிய வீரர்கள்!

0
மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - அணியில் தக்கவைக்கப்படும் 5 முக்கிய வீரர்கள்!
மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - அணியில் தக்கவைக்கப்படும் 5 முக்கிய வீரர்கள்!
மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அணியில் தக்கவைக்கப்படும் 5 முக்கிய வீரர்கள்!

IPL வரலாற்றில் அதிக முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் (MI) அணி வரும் ஐபிஎல் 2023 போட்டிக்கு முன்னதாக குறிப்பிட்ட சில வீரர்களை மீண்டும் தக்கவைத்துக்கொள்ளும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ்

இந்தியன் பிரீமியர் லீக்கின் 16வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக ஒவ்வொரு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பும் நடத்தப்படும் ஏலம், ஐபிஎல் 2023க்காக பிப்ரவரி 2023ல் நடைபெறலாம் என்று தெரிகிறது. இதற்கிடையில் சமீபத்தில் முடிவடைந்த IPL சீசனில் மோசமான தோல்வியை தழுவி இருக்கும் சில அணிகள் வரும் ஆண்டில் அதே தவறுகளை திரும்ப செய்யக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும். அந்த வகையில் ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் (MI) அணி இந்த ஆண்டு மறக்க முடியாத ஒரு சீசனை கொண்டிருந்தது.

Exams Daily Mobile App Download

அதாவது, இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் அதிக வெற்றிகளை பெற்ற அணியான மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் 2022ல் வெறும் நான்கு லீக் ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் சாம்பியன் அணிக்கு புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் மட்டுமே கிடைத்தது. இப்போது இந்த சீசனை ஒரு பாடமாக எடுத்துக்கொண்ட மும்பை அணி அடுத்த ஐபிஎல் 2023 ஏலத்திற்கு முன்னதாகவே சில தந்திரோபாய முடிவுகளை எடுக்கத் தொடங்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அந்த வகையில் அடுத்த சீசனுக்கு முன் மும்பை அணி தக்கவைக்கக்கூடிய ஐந்து முக்கிய வீரர்கள் குறித்த விவரங்கள் தற்போது கிடைத்துள்ளது.

ரோஹித் சர்மா:

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, கடந்த 2011ம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒரு பகுதியாக இணைந்து இப்போது முக்கியமான உறுப்பினராகிவிட்டார். அதனால் எவ்வித மறுபேச்சும் இல்லாமல் ரோஹித் சர்மா IPL 2023 போட்டிக்கு முன்பாக தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பார். ஏனென்றால் இவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.

ஜஸ்பிரித் பும்ரா:

ஜஸ்பிரித் பும்ரா நிச்சயமாக மும்பை அணியால் தக்கவைக்கப்படும் மற்றொரு வீரர் ஆவார். உலகின் சிறந்த பேட்ஸ்மேன்கள் கூட அவரது குறுகிய ரன்-அப் மற்றும் அசாதாரண பந்துவீச்சு நடவடிக்கையால் கொஞ்சம் தடுமாறி தான் போகிறார்கள். மரண ஓவர்களில் அவரது பந்துவீச்சு திறன்களுடன் போட்டியிடக்கூடிய பட்டியலில் பல முன்னணி பந்துவீச்சாளர்களின் பெயர்கள் அடிபட்டு போகும். கடந்த 2013ம் ஆண்டில் மும்பை அணியில் இணைந்ததில் இருந்து அணியின் வெற்றிக்கு அவர் உண்மையிலேயே பங்களித்துள்ளார்.

கீரன் பொல்லார்ட்:

வெஸ்ட் இண்டீசை சேர்ந்த கீரன் பொல்லார்ட், மும்பை இந்தியன்ஸிடமிருந்து பெறும் அன்பும் பாசமும் அவரை சொந்த ஊராக உணர வைக்கிறது. கடந்த 2010 முதல் அவர் ஏறக்குறைய 12 ஆண்டுகளாக MI அணியின் முக்கிய வீரராக இருந்த பிறகு, பொல்லார்ட் போன்ற ஒரு வீரரை அவர்கள் புறக்கணிப்பது கடினம் என்பது தெளிவாக தெரிகிறது. ஒரு சில சமயங்களில் மற்ற அனைவரும் போட்டியை விட்டுக்கொடுத்தபோது அணிக்காக அவர் தனித்து நின்று பல விளையாட்டுகளை வென்றிருக்கிறார்.

சூர்யகுமார் யாதவ்:

கடந்த 2018ம் ஆண்டின் தொடக்கத்தில் மும்பை அணியுடன் சூர்யகுமார் இணைந்ததில் இருந்து MIக்கு சிறந்த ஃபார்மில் உள்ளார். அணியின் டாப்-ஆர்டர் பேட்ஸ்மேனாக வரும் அவர் அந்த இடத்தில் மிகவும் நிலையான செயல்திறன் கொண்டவர். சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் 2022ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 8 போட்டிகளில் விளையாடி 303 ரன்கள் எடுத்தார். இவரது சராசரி 43.29 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 145.67 ஆக இருந்தது.

இஷான் கிஷன்:

இஷான் கிஷன் மும்பை அணியால் நிச்சயமாக தக்கவைக்கப்படும் மற்றொரு வீரர் ஆவார். இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி இந்திய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் இஷான் கிஷனை ரூ.15.25 கோடிக்கு எடுத்தது. அந்த வகையில் 2022 ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட வீரராக ஷ்ரேயாஸ் ஐயரை முந்தியுள்ளார் கிஷன். ஆனால், 2022 இந்தியன் பிரீமியர் லீக் சீசனில் இஷான் கிஷன் 14 போட்டிகளில் விளையாடி 32.83 சராசரியுடன் மூன்று அரை சதங்களுடன் 418 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!