கர்நாடக அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – 7வது ஊதிய குழு அமல்!

0
கர்நாடக அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் - 7வது ஊதிய குழு அமல்!
கர்நாடக அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் - 7வது ஊதிய குழு அமல்!
கர்நாடக அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – 7வது ஊதிய குழு அமல்!

கர்நாடக மாநில அரசு ஊழியர்களுக்கு ஊதிய விகிதத்தை மாற்றி அமைப்பதற்கான 7வது ஊதிய குழு அடுத்த மாதத்தில் அமலுக்கு வர இருப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

7வது ஊதியக் குழு:

கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களின் ஊதிய விகிதத்தை மாற்றி அமைப்பதற்கான 7வது ஊதியக் குழுவை கர்நாடக அரசு அறிவித்திருக்கிறது. மேலும், இந்த புதிய ஊதிய விகிதம் அடுத்த மாதத்திலிருந்து அமலுக்கு வர இருப்பதாகவும் கர்நாடக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், கர்நாடக அரசு பசுக்களை பாதுகாப்பதற்கான புண்ணியகோடி என்ற புதிய திட்டத்தையும் கர்நாடக மாநிலத்தில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது, மாநில அரசு ஊழியர்கள் தினம் மற்றும் மாநில அளவிலான ‘சர்வோத்தம சேவா’ விருது வழங்கும் விழாவில் முதல்வர் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது ‘புண்ணியகோடி தத்து யோஜனா’ என்கிற திட்டத்தின் கீழ் உள்ள ஏ மற்றும் பி பிரிவை சார்ந்த அரசு ஊழியர்கள் பசுக்களை தத்தெடுப்பதாக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். மேலும் ஒரு பசுவை தத்தெடுப்பதற்காக ஒரு வருடத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையாக ரூபாய் 11,000 வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் புண்ணியகோடி திட்டத்தின் கீழ் தத்தெடுக்க கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பசுக்கள் இருப்பதாகவும் முதல்வர் அறிவித்திருக்கிறார்.

தமிழக பள்ளி மாணவர்களுக்கான ரூ.1500 உதவித்தொகை – விண்ணப்பிக்க நாளையே இறுதி நாள்!

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் பசுக்களை தத்தெடுப்பதற்காக வழங்கப்பட இருக்கும் தொகைக்காக ரூபாய் 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரு மாநிலத்தில் உள்ள பசுக்களைப் பாதுகாப்பது மக்களின் உரிமை எனவும், மக்களின் பங்களிப்பு இதற்கு மிகவும் முக்கியம் எனவும் அறிவித்துள்ளார். மேலும், ‘ஆரோக்ய சஞ்சீவினி’ திட்டத்தின் கீழ் உள்ள அரசு ஊழியர்களுக்கு சலுகை வழங்கப்படும் எனவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here