Jio, Airtel, Vi பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பெஸ்ட் ஹெவி டேட்டா திட்டங்கள்!

0
Jio, Airtel, Vi பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - பெஸ்ட் ஹெவி டேட்டா திட்டங்கள்!
Jio, Airtel, Vi பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - பெஸ்ட் ஹெவி டேட்டா திட்டங்கள்!
Jio, Airtel, Vi பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பெஸ்ட் ஹெவி டேட்டா திட்டங்கள்!

நமது நாட்டில் உள்ள மூன்று முக்கிய தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் , அதிக டேட்டா தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய பல 3ஜிபி டேட்டா திட்டங்களை தன் வசம் வைத்துள்ளனர். இந்த உயர்நிலை ப்ரீபெய்ட் பேக்குகள், தங்கள் திட்டங்களில் தரவை அதிகரிக்க விரும்பும் பயனர்களுக்கு ஏற்றது. ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா வழங்கும் தினசரி 3ஜிபி டேட்டா கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் திட்ட விவரங்கள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

ஹெவி டேட்டா திட்டங்கள்:

Jio, Airtel அல்லது Vodafone Idea (Vi) அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் ஒன்றன் பின் ஒன்றாக சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகின்றன. அந்த வகையில் அதிக அளவில் டேட்டா தேவைப்படும் ப்ரீபெய்ட் திட்டங்களை அதாவது, தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டங்களை Jio, Airtel, Vi நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டங்கள் பயனர்களுக்கு சரியான தேர்வாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ExamsDaily Mobile App Download

ஏர்டெல் வழங்கும் ஹெவி டேட்டா திட்டங்கள்:

ஏர்டெல் நிறுவனம் தினமும் 3GB டேட்டா கிடைக்கும் திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்குத் தினமும் 3GB டேட்டா கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை ரூ. 599 விலையிலிருந்து வழங்குகிறது. இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினமும் 100 SMS நன்மைகள் கிடைக்கும். இந்த திட்டத்தின் பயனர்களுக்கு கூடுதல் பலனாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் OTT இயங்குதளத்திற்கான வருடாந்திர சந்தாவுடன் வழங்குகிறது. இதேபோல், ஒவ்வொரு நாளும் 3ஜிபி டேட்டாவை வழங்கும் மற்றொரு திட்டமான ரூ. 699 திட்டத்தை ஏர்டெல் வழங்குகிறது. இந்த திட்டத்தில் செல்லுபடியாகும் காலம் 56 நாட்கள் என்பது கவனிக்கத்தக்கது.

ஜியோ வழங்கும் ஹெவி டேட்டா திட்டங்கள்:

ஜியோவின் ரூ.419 ப்ரீபெய்ட் திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினமும் 100 SMS, தினமும் 3ஜிபி டேட்டா ஆகிய நன்மைகளை 28 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது.மேலும் தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ரூ. 601 விலையில் OTT நன்மையோடு தினமும் 3ஜிபி டேட்டா நன்மை ஜியோவின் மற்றொரு 3ஜிபி டேட்டா கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டம், இது 28 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் ரூ. 601 விலையில் கிடைக்கிறது. இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினமும் 100 SMS ஆகிய நன்மைகளை நிறுவனம் வழங்குகிறது. இது தினசரி 3GB டேட்டாவுடன், பயனர்கள் கூடுதலாக 6GB டேட்டாவையும் வழங்குகிறது. இதேபோல், ஒவ்வொரு நாளும் 3GB டேட்டாவை வழங்கும் மற்றொரு திட்டமான ரூ. 699 திட்டத்தை ஏர்டெல் வழங்குகிறது.

PNB வங்கியில் 145 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

Vi வழங்கும் ஹெவி டேட்டா திட்டங்கள்:

தினமும் 3ஜிபி இணையத்தை வழங்கும் பல ப்ரீபெய்ட் திட்டங்களையும் Vi கொண்டுள்ளது. இதில் அடிப்படை 3GB பேக் ரூ.475 விலையில் வருகிறது. இது வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ்களுடன் 28 நாட்களுக்குச் செல்லுபடியாகும் காலத்திற்குத் தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பட்டியலில் உள்ள அடுத்த திட்டம் ரூ.699 விலையில் கிடைக்கிறது. இது ஏர்டெல் வழங்கும் திட்டத்தைப் போன்ற பலன்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

NPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!