தமிழகத்தில் நகைக்கடன் வாங்குபவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் சேவைக் கட்டண விலக்கு!

0
தமிழகத்தில் நகைக்கடன் வாங்குபவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - விரைவில் சேவைக் கட்டண விலக்கு!
தமிழகத்தில் நகைக்கடன் வாங்குபவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - விரைவில் சேவைக் கட்டண விலக்கு!
தமிழகத்தில் நகைக்கடன் வாங்குபவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் சேவைக் கட்டண விலக்கு!

இந்தியாவில் தற்போது தினமும் லட்சக்கணக்கான நபர்கள் நகைக்கடன்கள் வாங்கி வருகின்றனர். மேலும் அந்த நகைக்கடன்கள் பெறும்போது தனியாக சேவைக் கட்டணம் வாங்கப் படுகிறது. அதை வாங்க கூடாது என்று தொடர்ந்து மக்களின் சார்பில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

நகைக்கடன்:

இந்தியாவில் நகைக்கடன் மூலம் வங்கிகள் பெரும் லாபம் பார்த்து வருகின்றனர். மேலும் அவ்வாறு நகை மதிப்பீட்டாளர் கட்டணம் மற்றும் சேவைக் கட்டணங்களை தங்கள் நிர்வாகச் செலவினத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று பொது மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. மேலும் இதனால் மதிப்பீட்டு மற்றும் சேவைக்கட்டண சுமையால் அதிகம் பாதிக்கப்படுவது நாங்கள் தான் என்று பொது மக்கள் குமுறி வருகின்றனர். மேலும் வாராக்கடன்களை வசூலிப்பதற்காக வங்கிகள் வட்டி, அபராத வட்டி போன்றவற்றில் ஒரு பகுதியை தள்ளுபடி செய்யும் திட்டங்களையும் அறிவிக்கின்றன.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் தற்போது பொதுத்துறை வங்கிகள் நகை கடனுக்கு 7 முதல் 8 சதவீதமும், கூட்டுறவு நிறுவனங்கள் 10 முதல் 11 சதவீதமும் தனியார் துறை வங்கிகள் 8 முதல் 12 சதவீதமும் வட்டி வசூலிக்கின்றன. மேலும் கெடு தவறும்போது 3 சதவீதம் வரை அபராத வட்டியும், நோட்டீஸ் செலவுகளும், ஏலம் போட்டால் ஏலச் செலவுகள் ஆகியவற்றையும் பயனர்களிடம் இருந்தே பெற்று கொள்கின்றனர். ஆனால் இந்த சேவை கட்டணத்தை மட்டும் திருத்த எந்த வங்கியும் முன்வர வில்லை என்று பொதுமக்கள் வங்கிகளின் மேல் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் 5ம் வகுப்பு முடித்தவர்களுக்கு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

அதனை தொடர்ந்து, வங்கிகள் குறைந்த பட்சம் ரூ.5 லட்சம் வரை நகைக்கடன் பெறுபவர்களுக்கு நகை மதிப்பீட்டு கட்டணம் மற்றும் சேவைக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து யோசிக்க வேண்டும் என்றும், அதனை தொடர்ந்து, பொதுத்துறை வங்கிகளும் கூட்டுறவு வங்கிகளும் இந்தச் சலுகையை அளிப்பதன் மூலம் நகைக்கடன் வணிகத்தில் தனியார் நிதி நிறுவனங்களின் போட்டியை தவிர்த்து விடலாம் என்றும் நகைக்கடன் பெற்ற பயனாளிகள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here