அரசு ஓய்வுதியதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி வீட்டில் இருந்தபடியே ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்!

0
அரசு ஓய்வுதியதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இனி வீட்டில் இருந்தபடியே ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்!
அரசு ஓய்வுதியதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இனி வீட்டில் இருந்தபடியே ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்!
அரசு ஓய்வுதியதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி வீட்டில் இருந்தபடியே ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்!

இந்தியாவில் ஓய்வூதியம் பெறும் ஒவ்வொரு நபரும் தங்களின் வாழ்நாள் சான்றிதழை ஆண்டுதோறும் ஓய்வூதிய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். இந்த நிலையில் ஓய்வூதியர்களின் நலனை கருத்தில் கொண்டு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

வாழ்நாள் சான்றிதழ்:

இந்தியாவில் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணி காலத்திற்கு பிறகு உதவும் மாதந்தோறும் அரசு சார்பாக பென்ஷன் தொகை (ஓய்வூதியம்) வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதிய தொகையை மாதந்தோறும் தவறாமல் பெற வேண்டும் என்றால் ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொருவரும் ஆண்டுதோறும் தான் உயிருடன் இருப்பதை உறுதி செய்யும் ஆயுள் சான்றிதழை அரசிடம் சமர்பிக்க வேண்டும். கடந்த வருடத்தில் வேகமெடுத்து பரவிய கொரோனா பெருந்தொற்று அச்சத்தால் வயது முதிர்ந்த ஓய்வூதியதாரர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

பெரும்பாலும் வயதானவர்கள் அதிகம் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வந்ததால் நேரடியாக ஓய்வூதிய அலுவலகம் வந்து ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதில் இடர்பாடுகளை சந்தித்தனர். அதனால் ஓய்வூதியதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் எங்கும் அலையாமல் வீட்டில் இருந்த படியே ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கும் முறை கொண்டு வரப்பட்டது. அதாவது ஆண்டுதோறும் ஓய்வூதியதாரர் ஆன்லைன் வாயிலாக டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

தமிழகத்தில் OLA ஆட்டோ, கார் சேவைக்கான கட்டணம் அதிரடி உயர்வு – அவதியில் பயணிகள்!

தற்போது இந்திய தபால் வங்கி டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் வசதியை வழங்கி வருகிறது. ஓய்வூதியதாரர்கள் 155299 என்ற இலவச தொலைபேசி எண்ணை அழைத்து தபால்காரர் நேரடியாக வீட்டிற்கே வந்து உங்களின் சான்றிதழை பெற்றுக் கொள்வார். இதற்கு கட்டணமாக ரூ. 70 செலுத்த வேண்டும். மத்திய அரசு, மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் EPFO ஓய்வூதியதாரர்கள் என அனைவருமே வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!