அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் சம்பளம்!

0
அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - விரைவில் சம்பளம்!
அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - விரைவில் சம்பளம்!
அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் சம்பளம்!

இலங்கையில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங் பதவியேற்றார். இந்த நிலையில் மக்களிடம் உரையாற்றிய இவர் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தருவதற்காக ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்து உள்ளார்.

ரூபாய் நோட்டு:

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா பெருந்தொற்று, இதனை கட்டுப்படுத்தும் விதமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு போன்றவற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடைகள், அலுவலகங்கள் மூடப்பட்டதால் மக்கள் வேலை, வாழ்வாதாரம் இழந்து பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வந்தனர். மேலும் பங்கு சந்தை சரிவு, உற்பத்தி குறைவு போன்ற காரணங்களால் ஒவ்வொரு நாடும் பொருளாதார சரிவை சந்தித்தது. ஏற்கனவே மக்கள் வேலையின்றி சிரமப்பட்டு வந்த வேளையில் அதிகரித்த அத்தியாவசிய பொருட்களின் விலை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Exams Daily Mobile App Download

மற்ற நாடுகளை தொடர்ந்து இலங்கை கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. அதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நியமனம் செய்யப்பட்டார். இவர் பொறுப்பேற்ற பிறகு தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இலங்கை அரசுக்கு சொந்தமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

மார்ச் 2021 நிலவரப்படி 4,500 கோடி டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விமான நிறுவனம் எதிர்கொண்டுள்ள நஷ்டத்தை ஈடு செய்ய இந்த நிறுவனத்தை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தருவதற்காக ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிதாக ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதால் நாட்டின் நாணய மதிப்பு மேலும் சரிவடையும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும் கச்சா எண்ணெயுடன் 3 கப்பல்கள் இலங்கை துறைமுகத்தில் உள்ளது. இவற்றுக்கு பணம் செலுத்தினால் மட்டுமே அவற்றை இறக்குமதி செய்ய முடியும். அதற்கு தேவையான பணத்தை திரட்டவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!