அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி வெள்ளிக்கிழமைதோறும் விடுமுறை!

0
அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இனி வெள்ளிக்கிழமைதோறும் விடுமுறை!
அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இனி வெள்ளிக்கிழமைதோறும் விடுமுறை!
அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி வெள்ளிக்கிழமைதோறும் விடுமுறை!

நாட்டில் அரசு ஊழியர்களுக்கும் போக்குவரத்து வசதிகளை பெற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வாரத்தில் பணியாற்றும் ஒரு நாள் அரசு விடுமுறை தினமாக வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ஊழியர்கள் அதிக மகிழ்ச்சியில் உள்ளனர்.

முக்கிய உத்தரவு:

அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளை பொதுமக்களுக்கு சேர்ப்பதில் அதிக முக்கியத்துவம் வகிப்பது அரசு ஊழியர்கள் தான். அவர்களை போற்றும் விதமாக அவர்களுக்கு பல்வேறு வகையான சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசு ஊழியர்களுக்கு மட்டும் இல்லாமல் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கடந்த 2 வருடங்களில் கொரோனா தாக்கத்தால் நாடு முழுவதுமே முடங்கிய நிலையில் தான் இருந்தது. இருப்பினும் அரசு வேலைகளில் எந்த ஒரு தடையும் ஏற்பட கூடாது என்று அரசு ஊழியர்கள் தன்னலம் பாராமல் உழைத்தனர்.

TN Job “FB  Group” Join Now

இதனால் அரசு ஊழியர்கள் தான் அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் அவர்களை பாதுக்காக்கும் விதமாக அரசால் அவர்களுக்கு தற்செயல் விடுப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வாரத்தில் இருந்து அரசு ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளை விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாட்டில் எதிர்வரும் காலங்களில் ஏற்படக் கூடுமென எதிர்பார்க்கப்படும் உணவுத் தட்டுப்பாட்டுக்கு தீர்வாக, தமது வீட்டுத் தோட்டங்களில் அல்லது வேறு இடங்களில் அரசு ஊழியர்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் பொருட்டு, இவ்வாறு விடுமுறை வழங்க பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தர்மபுரியில் நாளை (ஜூன் 16) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – அறிவிப்பு வெளியீடு!

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, போக்குவரத்திற்கு தடங்கல் ஏற்பட்டுள்ளமை தொடர்பிலும் கவனம் செலுத்தி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 3 மாதங்களுக்கு வாரத்தின் வெள்ளிக்கிழமை தினத்தில் அரச நிறுவனங்களை மூடி ஊழியர்களுக்கு இவ்வாறு விடுமுறை வழங்கப்படவுள்ளது. ஆயினும் நீர், மின்சாரம், சுகாதாரம், பாதுகாப்பு, கல்வி, போக்குவரத்து, துறைமுகம், விமான சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு இதில் உள்ளடங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here