அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – மேலும் 3 சதவீதம் அகவிலைப்படி சம்பள உயர்வு!

0

அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – மேலும் 3 சதவீதம் அகவிலைப்படி சம்பள உயர்வு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 31%ஆக இருந்த சம்பளம் அகவிலைப்படி மேலும் 3 சதவீதம் அதிகரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிகாரபூர்வமான அறிவிப்பை எதிர்பார்த்து மத்திய அரசு ஊழியர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

சம்பள உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி இருமுறையாவது அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்குவது வழக்கம். எப்போதும் ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படி மார்ச் மாதத்தில் உயர்த்தப்படும் மற்றும் ஜுலை மாதத்தில் அகவிலைப்படி சம்பள உயர்வு கிடைக்கும். இந்த சம்பள உயர்வால் கிட்டத்தட்ட 50 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் பயன் பெறலாம்.

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – FD கணக்குகளுக்கு அதிக வட்டி!

இந்த கொரோனா கால கட்டத்தில் தான் 28 சதவீதமாக இருந்த சம்பளம் அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரித்து 31% ஆக இருந்தது. மேலும், இந்த மார்ச் மாதத்தில் 3% அகவிலைப்படி சம்பள உயர்வு இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அகவிலைப்படி சம்பளம் 3% அதிகரித்தால் மத்திய ஊழியர்களின் சம்பளம் ரூ.20,000 வரை உயரக்கூடும். மார்ச் மாதத்திலேயே 3% அகவிலைப்படி சம்பள உயர்வு இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

அகவிலைப்படியை உயர்த்த அரசு முடிவு செய்தால், பல்வேறு அரசுகளில் பணிபுரியும் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகப் பயனடைவார்கள். இதன்மூலம், இந்த அகவிலைப்படி உயர்வால் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயனடைவார்கள். எப்படியும் ஓரிரு மாதத்திற்குள் அகவிலைப்படி மேலும், மூன்று சதவீதம் சதவீதம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் முதல் ஜூன் வரையிலான ஏஐசிபி குறிப்பேட்டில் முன்னேற்றம் ஏற்பட்டால் கண்டிப்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் டிஏ குறித்தான நல்ல செய்தி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!