மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – ஒரே நேரத்தில் சம்பள உயர்வு & அகவிலைப்படி!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் - ஒரே நேரத்தில் சம்பள உயர்வு & அகவிலைப்படி!
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் - ஒரே நேரத்தில் சம்பள உயர்வு & அகவிலைப்படி!
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – ஒரே நேரத்தில் சம்பள உயர்வு & அகவிலைப்படி!

நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்து வருவதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த திடீர் அறிவிப்பினால் ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

சம்பள உயர்வு:

ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே செல்வதால் நாட்டில் விலைவாசி உயர்வும் ஏற்பட்டு வருகிறது. இதனை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. எப்போதும் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு மார்ச் மாதத்தில் வழங்கப்படும் மற்றும் ஜூலை மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. இந்த கொரோனா காலகட்டத்தில் மட்டுமே 28 சதவீதத்திலிருந்து அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரித்து 31 சதவீதமாக அதிகரித்தது.

Exams Daily Mobile App Download

இதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் 3 சதவீதம் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டு தற்போது 34 சதவீதமாக உள்ளது. கடந்த சில மாதங்களாக பணவீக்கம் அதிரடியாக உயர்ந்து வருகிறது. இந்த ஏப்ரல் மாதத்தில் மட்டுமே பணவீக்கம் 7.79 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், மார்ச் மாதத்தில் 6.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த பணவீக்கத்தை சமாளிக்க வேண்டுமானால் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்க வேண்டும்.

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி – 32,000 ரூபாய் சம்பளம்!

பணவீக்கத்தால் அரசு ஊழியர்கள் மிகவும் திணறி வருவதன் காரணமாக ஜூலை மாதத்தில் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் 54 ஆயிரத்து 900 ரூபாய் எனில் அகவிலைப்படி 34% எனும்போது 19 ஆயிரத்து 346 ரூபாய் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கிறது. மேலும் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் உயர்வினால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here