மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – சம்பள உயர்வு அறிவிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் - சம்பள உயர்வு அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் - சம்பள உயர்வு அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – சம்பள உயர்வு அறிவிப்பு!

சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) தொகை உயர்த்தி அறிவிக்கப்பட்டதை அடுத்து கூடுதலாக HRA, PF உள்ளிட்ட 4 கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் சம்பளத்தில் பம்பர் உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சமீபத்தில் 3% அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) தொகை 34% ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, தற்போது அரசு ஊழியர்களின் சம்பளம் மீண்டும் உயரப் போகிறது. இதை தொடர்ந்து அரசு ஊழியர்களின் மற்ற 4 அலவன்ஸ்களை உயர்த்த அரசு பரிசீலித்து வருகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கொடுப்பனவுகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டால், ஊழியர்களின் சம்பளத்தில் பம்பர் உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – பதவி உயர்வில் புதிய மாற்றங்கள்!

அந்த வகையில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்ட பிறகு, தற்போது மற்ற அலவன்ஸ்களும் அதிகரிக்கப்பட உள்ளன. அதன்படி, மத்திய அரசு ஊழியர்களின் பயண அலவன்ஸ் மற்றும் சிட்டி அலவன்ஸ் ஆகியவை அதிகரிக்கப்பட இருக்கிறது. வழக்கமாக அகவிலைப்படி உயர்வுக்கு பின்பாக மத்திய அரசு ஊழியர்களின் HRA தொகையும் அதிகரிக்கப்படும். அந்த வகையில் சமீபத்தில் 34% DA உயர்வுக்கு பிறகு இப்போது மீண்டுமாக HRA உயர்வு கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இது தவிர, மத்திய அரசு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்போது மத்திய அரசு ஊழியர்களின் மாதாந்திர பிஎஃப் மற்றும் பணிக்கொடை அடிப்படை ஊதியம் மற்றும் டிஏவில் இருந்து கணக்கிடப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், அகவிலைப்படி அதிகரிப்பால், PF மற்றும் Gratuity அதிகரிப்பது உறுதி. இப்போது அகவிலைப்படி உயர்வு காரணமாக, மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகைப் படி, பயணப் படியில் உறுதியான உயர்வு உள்ளது. அந்த வகையில் ஒரே நேரத்தில் நான்கு கொடுப்பனவுகளை அதிகரிப்பதன் பலனை ஊழியர்கள் பெறலாம்.

இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க முழு விபரங்கள் இதோ!

முன்னதாக கடந்த 9 மாதங்களில் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இப்போது பணியாளருடன், ஓய்வூதியம் பெறுவோர் 34% விகிதத்தில் DA மற்றும் DR பெறுவார்கள். அரசின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, 50 லட்சம் ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மறுபுறம், இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 9455.50 கோடி ரூபாய் சுமை அதிகரிக்கும். இதற்கிடையில் மத்திய ஊழியர் அமைப்பும் 18 மாத நிலுவைத் தொகைக்காக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here