தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஹாப்பி நியூஸ் – அமைச்சரின் முக்கிய அறிவிப்புகள்!

0
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஹாப்பி நியூஸ் - அமைச்சரின் முக்கிய அறிவிப்புகள்!
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஹாப்பி நியூஸ் - அமைச்சரின் முக்கிய அறிவிப்புகள்!
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஹாப்பி நியூஸ் – அமைச்சரின் முக்கிய அறிவிப்புகள்!

தமிழக சட்டசபை ஏப்ரல் 6 கூடியது. அதில், துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. முன்னதாக கேள்வி நேரமும் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இந்த வகையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 10 புதிய அறிவிப்புகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டு உள்ளார்.

முக்கிய அறிவிப்பு:

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம், ஏப்.,6 ல் துவங்கி மே 10 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பு அடிப்படையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று (ஏப்ரல் 20) சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 10 புதிய அறிவிப்புகளை அத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சட்டப்பேரவையில் அறிவித்தார். அந்த கோரிக்கைகள் நகர்ப்புறங்களில் வாழும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை குடும்பங்கள் பயன்பெறும் வகையில் செயல்பாட்டுக்கு வரும் என அறிவித்துள்ளார். மேலும் இன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

1.மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற சிதிலடமைந்த 7,500 அடுக்குமாடிக் குடியிருப்புகள் ரூ.1200 கோடி திட்ட மதிப்பீட்டில் இந்த ஆண்டு மறுகட்டுமானம் செய்யப்படும்.

2.நடப்பு நிதியாண்டில் நிலப் உரிமை உள்ள பொருளாதாரத்தில் நலிவுற்ற பயனாளிகளுக்கு தாமாகவே வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் தனி வீடுகள் கட்டப்படும்.

ExamsDaily Mobile App Download

3.நகர்ப்புறங்களில் வாழும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இந்த நிதியாண்டில் 25 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

4 குடியிருப்புதாரர்கள் உடனடியாக பராமரிப்பு கட்டணம் செலுத்துவதற்கு ஊக்கமளிக்கும் வகையில் மூன்று மாத பராமரிப்பு தொகை அரசு பங்களிப்பு நிதியிலிருந்து முன்பணமாக செலுத்தப்படும்.

5.குடியிருப்பு திட்ட பகுதிகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் நல்ல முறையில் பேணி காத்திட கொண்டுவரப்பட்ட “நம் குடியிருப்பு நம் பொறுப்பு’ திட்டத்தை திறம்பட செயல்படுத்த குடியிருப்போர் நலச் சங்கங்கள் பதிவு செய்வதற்கு செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணத்திற்கு விலக்கு அளிக்கப்படும்.

6.அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிப்பு பணியை திறம்பட செயல்படுத்திட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியத்தில் தனி பராமரிப்பு பிரிவு ஏற்படுத்தப்படும்.

தமிழக அரசில் 4 லட்சம் காலிப்பணியிடங்கள், பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – வலுக்கும் போராட்டம்!

7.சென்னை மற்றும் இதர நகரங்களில் உள்ள 40,000 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூபாய் 100 கோடி திட்ட மதிப்பீட்டில் இந்த நிதியாண்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

8.வீட்டு வசதி தேவை இருப்பு நிதி ஆதாரங்கள் வீட்டுவசதி சந்தையின் செயல்திறன் முதலீடு மற்றும் கொள்கை முடிவு எடுக்க ஏதுவான வழிமுறைகள் குறித்த தகவல்களைக் கொண்ட தளமாக ஒருங்கிணைந்த தமிழ்நாடு வீட்டு வசதி தகவல் அமைப்பு இயங்கும்.

9.குடியிருப்பு தாரர்கள் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மாதாந்திரத் தவணைத் தொகையினை இணையதள செயலி மூலம் குறித்த காலத்திற்குள் சுலபமாக செலுத்த வழி வகை செய்யப்படும்.

10.பயனாளிகள் திறன் மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்யும் வகையில் பல்வேறு தரை பரப்பளவு கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!