‘குக் வித் கோமாளி 3’ ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இவர் தான் இந்த வார சிறப்பு விருந்தினரா?

0
‘குக் வித் கோமாளி 3’ ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இவர் தான் இந்த வார சிறப்பு விருந்தினரா?
‘குக் வித் கோமாளி 3’ ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இவர் தான் இந்த வார சிறப்பு விருந்தினரா?
‘குக் வித் கோமாளி 3’ ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இவர் தான் இந்த வார சிறப்பு விருந்தினரா?

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது ‘குக் வித் கோமாளி’ எனும் சமையல் நிகழ்ச்சி. கலகலப்பு நிறைந்த இந்நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. இந்நிலையில் இந்த வராம் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிறப்பு விருந்தினர்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் தற்போது குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சி, மற்ற எல்லா நிகழ்ச்சிகளையும் டி.ஆர்.பி ரேட்டிங்கில் ஓரம் தள்ளி உள்ளது. ரக்சன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசனுக்கு அதிக அளவில் வரவேற்பு கிடைத்தது.

முதல் சீசனில் வனிதாவும், இரண்டாவது சீசனில் கனியும் வெற்றி பெற்றனர். இந்நிலையில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. மேலும் 3வது சீசனுக்கு பயங்கர ரெஸ்பான்ஸ் கிடைத்து உள்ளது. தற்போதைய சீசன் 3யில் போட்டியாளர்களாக அம்மு அபிராமி, கிரேஸ் கருணாஸ், தர்ஷன், பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினி ஹரிப்பிரியன், சந்தோஷ் பிரதாப், ஸ்ருத்திகா அர்ஜுன், வித்யுலேகா ராமன், ஆகியோரும், கோமாளிகளாக பாலா, குரேஷி, மணிமேகலை, சிவாங்கி, மூக்குத்தி முருகன் , சுனிதா, அதிர்ச்சி அருண், சக்தி ராஜ், பரத் கே ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Exams Daily Mobile App Download

பல வாரங்கள் கடந்த நிலையில் தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர், அவர்களுடன் 2 பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக போன வாரம் உள்ளே வந்தனர். இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த ஷிவாங்கி, சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடிக்கிறார். அதேபோல் பவித்ரா, தர்ஷன் ஆகியோர் படங்களில் கதாநாயகியாக நடிக்கின்றனர். புகழ், பாலா ஆகியோர் காமெடியனாக நடித்து வருகின்றனர். அஸ்வின் ஹீரோவாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள், கோமாளிகள் செய்யும் கலாட்டாக்களுக்காகவும், காமெடிகளுக்காகவும் பார்க்கின்றனர்.

தாத்தாவின் பிறந்தநாளுக்கு ராதிகாவை அழைத்த பாக்கியா, மாட்டிக் கொள்ள போகும் கோபி – “மகா சங்கமம்” ப்ரோமோ ரிலீஸ்!

இந்நிலையில், இந்த வாரம் கோமாளிகளுக்கு என்ன கெட்டப் என தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் ஆர்வமாக இருந்த நிலையில், தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக வருகிறார். அவரின் ’டான்’ திரைப்படம் திரைக்கு வரவிருக்கும் நிலையில் படம் குறித்தும் இந்த நிகழ்ச்சியில் பல தகவல்களை பகிர்ந்து கொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அதிக எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்து கொண்டு உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!