சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 200வது போட்டியை வெற்றியுடன் முடித்த அணி!

0
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - 200வது போட்டியை வெற்றியுடன் முடித்த அணி!
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - 200வது போட்டியை வெற்றியுடன் முடித்த அணி!
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 200வது போட்டியை வெற்றியுடன் முடித்த அணி!

IPL வரலாற்றில் முதன் முறையாக தொடர்ச்சியாக 4 போட்டிகளை தோற்றிருந்த நடப்பு சாம்பியன்கள் நேற்று (ஏப்ரல்.12) நடைபெற்ற 200வது ஆட்டத்தில் வெற்றிக்கனியை பறித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படக்கூடிய ஒரு நிகழ்வாக மாறி இருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ்

IPL 2022 போட்டிகளில் நேற்று (ஏப்ரல்.12) நடைபெற்ற CSK vs RCB ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஃபார்முக்குத் திரும்பியது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி RCB அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்த சீசனுக்கான முதல் புள்ளியை பெற்றுள்ளது. இதில் ஸ்வாரசியம் என்னவென்றால், கடந்த 4 ஆட்டங்களில் தோல்வியை தழுவிய CSK அணி, தனது 200 வது ஐபிஎல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது ரசிகர்களால் மறக்க முடியாத நிகழ்வாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கான ஆட்டம் இந்தியன் பிரீமியர் லீக்கில் மிகவும் பரபரப்பான மேட்ச்-அப்களில் ஒன்றாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் – IPL 2022 தொடரில் இருந்து விலகிய தீபக் சாஹர்!

இதற்கு முன்னதாக, CSK மற்றும் RCB அணி இதுவரை 27 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி 18 ஆட்டங்களில் வென்றது. அதே நேரத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியால் 9 வெற்றிகளை மட்டுமே பெற முடிந்தது. இதனுடன் நேற்று இரவுக்கு முன், CSK அணி IPL 2022 சீசனில் ஒரு பயங்கரமான தொடக்கத்தைத் கொடுத்து, முதல் நான்கு போட்டிகளில் தோல்வியடைந்தது. IPL வரலாற்றில் இதற்கு முன் நடப்பு சாம்பியன்கள் இவ்வளவு மோசமான தொடக்கத்தை பெற்றதில்லை.

இதற்கிடையில் ஆர்சிபி தனது தொடக்க ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்தில் இருந்தது. ஆனால் தொடர்ச்சியாக 4 போட்டிகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயங்கரமான தொடக்கத்திற்குப் பிறகு தனது அணி சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும், பந்து வீச வேண்டும் மற்றும் பீல்டிங் செய்ய வேண்டும் என்பதில் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெளிவாக இருந்தார்.

இந்திய விமான நிலைய ஆணையத்தில் Consultant பணிவாய்ப்பு – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

அதனால் RCBக்கு எதிரான மோதலுக்கு முன்னதாக, ஃப்ளெமிங் எந்த விரக்தியையும் காட்ட விரும்பவில்லை. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 60 ரன்களில் இருந்து 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 216 ரன்களை எடுக்க முடிந்தது. குறிப்பாக, ராபின் உத்தப்பாவின் மூன்று சிக்ஸர் உடன் 88 ரன்கள், ஷிவம் துபே 95 ரன்கள் ஆகியவை சிறந்த துவக்கமாக அமைந்தது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்த 217 ரன்கள், ஐபிஎல்லில் 200க்கும் அதிகமான ஸ்கோர்களை பெற்ற ஆர்சிபியின் சாதனையை சமன் செய்தது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!