சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – MIக்கு எதிராக களமிறக்கப்படும் பிளேயிங் 11 அணி!

0
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - MIக்கு எதிராக களமிறக்கப்படும் பிளேயிங் 11 அணி!
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - MIக்கு எதிராக களமிறக்கப்படும் பிளேயிங் 11 அணி!
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – MIக்கு எதிராக களமிறக்கப்படும் பிளேயிங் 11 அணி!

இன்று (ஏப்ரல்.21) நடைபெற இருக்கும் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி மிகவும் திறமையாக பிளேயிங் 11 அணியை தேர்வு செய்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

பிளேயிங் 11 அணி

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் இன்று (ஏப்ரல்.21) நடைபெற இருக்கிறது. இந்த ஆட்டம் இவ்விரு அணிகளுக்கும் முக்கியமான ஒன்றாக இருப்பதால் களத்தில் ஸ்வாரசியத்திற்கு பஞ்சம் இருக்காது என்பது உறுதியாகி இருக்கிறது. ஏனென்றால் IPL வரலாற்றில் அதிகமுறை சாம்பியன் பட்டங்களை வென்ற இவ்விரு அணிகளும் இந்த சீசனில் கடைசி இடங்களை வகித்துள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 ஆட்டத்திலும், மும்பை இந்தியன்ஸ் 6 ஆட்டங்களிலும் தோல்வியை தழுவி இருக்கிறது.

ExamsDaily Mobile App Download

இதனால் இன்று (ஏப்ரல்.21) நடைபெற இருக்கும் ஆட்டத்தில் எந்த அணி வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் மேலோங்கி இருக்கிறது. வழக்கமாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் ஆட்டத்தில் எப்போதும் MI அணியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். ஏனென்றால் சென்னை அணிக்கு எதிரான 33 ஆட்டங்களில் MI அணி இதுவரை 19 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு இன்றைய ஆட்டத்தில் CSK அணி அதீத கவனத்துடன் ப்ளேயிங் 11ஐ தேர்வு செய்துள்ளது.

IPL 2022 MI vs CSK: இன்றைய ஆட்டத்திற்கான ஒரு முன்னோட்டம் – உத்தேச XI அணி விவரம் இதோ!

அந்த வகையில் CSK அணியின் ஓப்பனிங் நிலைமை துவக்கத்தை விட இப்போது மேலோங்கி இருக்கிறது. ஏனென்றால் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெயிக்வாட் கடந்த போட்டியில் இருந்து ஃபார்முக்கு திரும்பிவிட்டார். அதே போல ராபின் உத்தப்பாவும் மும்பை அணிக்கு எதிராக நல்ல ரெக்கார்டை வைத்துள்ளதால் இந்த ஜோடி களத்தில் தடம் பதிக்க வாய்ப்புள்ளது. மிடில் ஆர்டரை பொறுத்தவரையில் மொயீன் அலி, அம்பத்தி ராயுடு ஆகியோர் ஃபார்ம் அவுட்டில் உள்ளதால் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் இவர்கள் சில மாயாஜாலங்களை செய்ய வேண்டும்.

அடுத்த ஆர்டரில் கேப்டன் ஜடேஜா மற்றும் எம்.எஸ்.தோனி வழக்கம் போல இறங்குவார்கள். பவுலிங்கை பொறுத்தவரை கிறிஸ் ஜோர்டன், முகேஷ் சௌத்ரிக்கு வாய்ப்பு கிடைக்கலாம். கடந்த ஆட்டத்தில் ஜோர்டன் 58 ரன்களை கொடுத்திருந்தாலும் அவர் XI அணியில் இருப்பார் என்று தெரிகிறது. மற்றபடி, சிஎஸ்கேவின் நம்பிக்கையாக இருக்கும் மஹீஷ் தீக்‌ஷணா மற்றும் டுவைன் பிராவோ MIக்கு எதிராக சில சாதனைகளை செய்தாக வேண்டும். குறிப்பாக, பார்ம் அவுட்டில் இருக்கும் MI அணியின் கேப்டன் ரோஹித் உட்பட சில வீரர்கள் இவர்களை பந்து வீச்சை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here