சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அடுத்த சீசனில் மீண்டும் ‘தல’ தோனி!

0
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - அடுத்த சீசனில் மீண்டும் 'தல' தோனி!
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - அடுத்த சீசனில் மீண்டும் 'தல' தோனி!
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அடுத்த சீசனில் மீண்டும் ‘தல’ தோனி!

IPL 2022 கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற போட்டியின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் கேப்டன் தோனி, தான் அடுத்த சீசனிலும் மீண்டும் வருவதாக அளித்துள்ள தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

MS தோனி

நடப்பு சீசனை தோல்வியுடன் ஆரம்பித்து தோல்வியுடன் முடித்துள்ளது நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி. இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் எக்கச்சக்கமான சாதனைகளை படைத்துள்ள சென்னை அணியின் தற்போதைய நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இந்த ஆண்டு பல்வேறு புதிய மாற்றங்களுடன் வெற்றிகளை எதிர்பார்த்து IPL போட்டிகளை துவங்கிய சென்னை அணி ஆரம்பத்தில் ஏகப்பட்ட தோல்விகளை பெற்று கொஞ்சம் ஏமாற்றியது. இருப்பினும் ஒரு சில வெற்றிகளுக்கு பிறகு கேப்டன் தோனி மீண்டும் அணியின் தலைமை பொறுப்பை கையில் எடுத்தார்.

Exams Daily Mobile App Download

ஆனால் அதுவும், வொர்க் அவுட் ஆகவில்லை எனும் போது நேற்று பெற்ற தோல்வியுடன் சென்னை அணி இப்போது 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறது. இந்த தோல்விகள் ஒரு புறம் இருக்க, சென்னை ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக தோனி ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, தோனியின் ஓய்வு குறித்து நீண்ட நாட்களாக எழுந்து வரும் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் அடுத்த வருடம் மீண்டும் வருவேன் என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து நேற்றைய ஆட்டத்தின் போது பேசிய தோனி, சென்னையில் உள்ள ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்காமல் இருப்பது அநியாயம் என்று தெரிவித்துள்ளர்.

மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கவனத்திற்கு – IPL 2023 சீசனில் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு பதிலாக களமிறங்கும் வீரர்?

அதாவது, ‘அடுத்த ஆண்டு கண்டிப்பாக IPL போட்டிகளில் இருப்பேன். இதற்கு ஒரு எளிய காரணம் தான் இருக்கிறது. சென்னையில் விளையாடாமல் இருப்பது, அவர்களுக்கு நன்றி சொல்லாமல் இருப்பது அநியாயம். மும்பை என்பது ஒரு இடம். அதேசமயம் ஒரு குழுவாகவும் தனி மனிதனாகவும் எனக்கு நிறைய அன்பும் பாசமும் கிடைத்தது. ஆனால் சிஎஸ்கே ரசிகர்களுக்கு இது நன்றாக இருக்காது. மேலும், அடுத்த ஆண்டு சென்னைக்கு பயணிக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தவிர, ‘இது எனது கடைசி ஆண்டாக இருக்குமா இல்லையா என்பது ஒரு பெரிய கேள்வி. ஏனென்றால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஏதாவது ஒன்றைப் பற்றி எங்களால் உண்மையில் கணிக்க முடியாது. ஆனால் அடுத்த ஆண்டு வலுவாக வருவதற்கு நான் கடுமையாக உழைக்கிறேன்’ என்று கூறியுள்ளார். இப்போது, தோனி அடுத்த ஆண்டும் சென்னை அணிக்காக விளையாட விரும்புவதாக அளித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனுடன், அவர் சென்னையில் விளையாடும் அடுத்த சீசனில் ஓய்வு குறித்து அறிவிக்கலாம் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here