மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – விரைவில் DA உயர்வு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் - விரைவில் DA உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் - விரைவில் DA உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – விரைவில் DA உயர்வு!

மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் அகவிலைப்படி உயர்வினை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், 4% வரைக்கும் அகவிலைப்படி உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DA உயர்வு:

மத்திய அரசு ஊழியர்களுக்கு நாட்டில் பணவீக்கம் உயர்வதை பொறுத்து ஆண்டிற்கு இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அதாவது, ஜனவரி முதல் ஜூலை மாதத்திற்குள் முதல் அகவிலைப்படி உயர்வும் , ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதத்திற்குள் இரண்டாவது அகவிலைப்படி உயர்வும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 34% என்கிற அளவில் அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இன்னும் 4% அகவிலைப்படி உயர வாய்ப்புள்ளதாக மத்திய அரசு ஊழியர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

அதாவது, நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) அடிப்படையில் தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஏஐசிபிஐ இன்டெக்ஸ் மதிப்பீட்டை பொறுத்து 4% வரைக்கும் DA உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இந்த முறை, 4% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 38%ஆக அகவிலைப்படி சம்பள உயர்வு இருக்கும்.

தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 25) மின்தடைக்கான பகுதிகள் – முழு List இதோ!

இதனிடையே, மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 ஆம் சம்பள கமிஷன் வழங்கப்படுமா என ஊழியர்கள் எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கின்றன. ஆனால், ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது ஊதியக் குழுவை அறிமுகப்படுத்தும் திட்டம் மத்திய அரசிடம் தற்போதைக்கு இல்லை என அறிவிக்கப்பட்டுவிட்டது. மேலும், அடுத்த மாதத்தின் இறுதிக்குள் கண்டிப்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!