மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – 6% அகவிலைப்படி சம்பள உயர்வு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் - 6% அகவிலைப்படி சம்பள உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் - 6% அகவிலைப்படி சம்பள உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – 6% அகவிலைப்படி சம்பள உயர்வு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவில் மேலும் பணவீக்கம் அதிகரித்துள்ள காரணத்தினால் 6 சதவீதம் வரை சம்பள உயர்வு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

சம்பள உயர்வு:

மத்திய அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது பணி உயர்வு, சம்பள உயர்வு முதலான பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் அவ்வப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்குவது வழக்கம். அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அறிவிப்பு வெளியாகி மார்ச் மற்றும் செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

மேலும் கொரோனா பரவலின் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் 2021 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசு ஊழியர்களுக்கான DA நிதி உயர்வு வழங்கப்படவில்லை. இதனையடுத்து ஜூலை மாதத்தில் DA 17% இல் இருந்து 28% ஆக உயர்த்தப்பட்டது. மீண்டும் கடந்த அக்டோபர் மாதத்தில் 31% ஆக உயர்த்தப்பட்டது. அடுத்ததாக ஜனவரி மாதத்தில் 34% வரைக்கும் உயர வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருப்பதி ஆர்ஜித சேவைக்கு குலுக்கல் முறையில் பக்தர்கள் தேர்வு – இன்று டிக்கெட் வெளியீடு!

மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அகவிலைப்படி 3 சதவீதம் வரைக்கும் உயர்த்தப்பட்டு தற்போது 34 சதவீதமாக உள்ளது. இதனையடுத்து இந்தியாவில் பணவீக்கம் அதிகரிப்பதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% வரைக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி அரசு ஊழியர்களை குஷிப்படுத்தியுள்ளது. 6% வரைக்கும் அகவிலைப்படி சம்பளம் உயர்வு வழங்கப்பட்டால் ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் ரூ. 3400 முதல் ஆண்டுக்கு 40 ஆயிரம் வரைக்கும் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!