ஆல்யா மனசா, சஞ்சீவ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மகன் அர்ஷின் முதல் ரம்ஜான் கொண்டாட்டம்!

0
ஆல்யா மனசா, சஞ்சீவ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - மகன் அர்ஷின் முதல் ரம்ஜான் கொண்டாட்டம்!
ஆல்யா மனசா, சஞ்சீவ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - மகன் அர்ஷின் முதல் ரம்ஜான் கொண்டாட்டம்!
ஆல்யா மனசா, சஞ்சீவ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மகன் அர்ஷின் முதல் ரம்ஜான் கொண்டாட்டம்!

விஜய் டிவி ,ஆலியா, சஞ்சீவ் தம்பதிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆலியா ராஜா ராணி சீரியல் செம்பாவாக ரசிகர்களின் மனதில் இடம் பெற்றுள்ளார். ஆலியாவும், சஞ்சீவும் ஷாப்பிங் சென்றது , புதிய கார் வாங்கியது, தங்களது திருமணம் குறித்து விளக்கியது, மற்றும் இவர்களின் குழந்தையுடன் விளையாடும் கியூட்டான வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் வீடியோ:

சின்னத்திரையின் பிரபலமான நடிகை ஆலியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார். ராஜா ராணி சீரியல் மூலம் பரபரப்பாக பேசப்பட்ட சஞ்சீவ்-ஆல்யா மானசா ஜோடி, நிஜ வாழ்விலும் ஒன்று சேர்ந்தது. இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ராஜா ராணி பார்ட் 2 வில் ஆலியா நடித்துக் கொண்டிருந்தார். அதில் படித்த பெண்ணான சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆலியா, படிக்காத சரவணன் என்பவரை திருமணம் செய்து கொள்கிறார். மேலும் இந்த தொடரில் IPS ஆக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் ஒரு பெண்ணாக ஆலியா நடித்து வந்தார். அப்போது அவர் 2ஆவது முறையாக கர்ப்பம் தரித்ததை அடுத்து அந்த சீரியலில் இருந்து விலகினார்.

Exams Daily Mobile App Download

சஞ்சீவும், ஆல்யாவும் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்வார்கள். இதற்காகவே, இவர்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அப்போது ஆண் குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைப்பீர்கள், பெண் குழந்தை பிறந்தால் என்ன வைப்பீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பெண் குழந்தைக்கு ஒரு பெயரை குறிப்பிட்ட சஞ்சீவ், ஆண் குழந்தை பிறந்தால் அர்ஷ் என பெயர் வைப்பதாக தெரிவித்தார். அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் ஆலியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் ஆலியா தற்போது இரு குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு வீட்டில் இருக்கிறார். சஞ்சீவ் கயல் சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார். சஞ்சீவ்-ஆல்யா இருவரும் நடத்தி வரும் யூடியூப் சேனலில் குழந்தை பிறந்ததை வீடியோவாக அழகாக பதிவு செய்து ஷேர் செய்துள்ளார்.

கோலாகலமாக நடந்த “பாரதி கண்ணம்மா” வெண்பா திருமணம் – மாப்பிளை இவரா? ப்ரோமோ ரிலீஸ்!

அதில், ஆலியா வீட்டில் இருந்து மருத்துவமனை சென்றதில் இருந்து குழந்தை பிறந்து கையில் ஏந்திய காட்சிகள் வரை உள்ளது. இறுதியாக ஆலியா மகள் தனது தம்பியை காண கியூட்டாக ஓடி வரும் காட்சிகளுடன் வீடியோ நிறைவடைகிறது. மேலும் இருவரும் அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது குழந்தைகள் செய்யும் சேட்டைகளை வீடியோவாக எடுத்து வெளியிடுவார்கள். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோ சஞ்சீவ், அவரது குடும்பத்தினருடன் ரமலான் பண்டிகைக்கு ஷாப்பிங் செய்யும் வீடியோ ஆகும். அர்ஷ் பிறந்து கொண்டாடப்படும் முதல் ரம்ஜான், அதனால் அவனுக்கு முதல டிரஸ் எடுக்கணும்னு சஞ்சீவ் அம்மா வீடியோவில் சொல்லி இருப்பார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here