அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – ஜூலை 11 வரை விடுமுறை!

0
அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஹாப்பி நியூஸ் - ஜூலை 11 வரை விடுமுறை!
அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஹாப்பி நியூஸ் - ஜூலை 11 வரை விடுமுறை!
அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – ஜூலை 11 வரை விடுமுறை!

இலங்கை 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து கண்டிராத பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. மக்கள் புரட்சியால் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். மேலும் ரணில் விக்கிரமசிங்கே புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். ஆனாலும் இலங்கையில் இன்னும் நெருக்கடிகள் குறைந்தபாடில்லை. இந்நிலையில் அடுத்தடுத்து பள்ளிகள் விடுமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

ஒரு வாரம் விடுமுறை:

அண்டை நாடான இலங்கை, கடுமையான அன்னியச் செலாவணி பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. மேலும் எண்ணெய் நிறுவனங்களுக்கு உரிய நிலுவையை வழங்காததால், அவை எரிபொருளை வழங்க மறுக்கின்றன. இதனால், பொது போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே அரசு வாகனங்கள் இயக்கப்படுகின்றன. மேலும் எரிபொருள் தட்டுப்பாட்டால் பள்ளிகள் இரு வாரங்களுக்கு மூடப்பட்டன.

TN Job “FB  Group” Join Now

நேற்று பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளும் வரும் 11ம் தேதி வரை மூட அரசு உத்தரவிட்டு உள்ளது. அதாவது, எரிபொருள் தட்டுப்பாட்டால் பள்ளிகளுக்கு மாணவர்கள், ஆசிரியர்கள் செல்லும் அளவிற்கு போதிய வாகன வசதி இல்லாததால் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது .மேலும் விடுபட்ட பாடங்களை அடுத்து வரும் விடுமுறை காலத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

கோபி ராதிகா உறவை நினைத்து வருத்தப்படும் பாக்கியா, விபத்து பற்றி தெரிந்து வந்த குடும்பத்தினர் – இன்றைய எபிசோட்!

இந்த காலத்தில் ஆன்லைன் வகுப்புகளை எடுக்குமாறு இலங்கை கல்வித் துறை செயலர் நிஹால் ரன்சிங்கே அறிவுறுத்தி உள்ளார். ஆன்லைனில் கல்வி கற்க ஏதுவாக காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரத்தை துண்டிக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்து பள்ளிகள் விடுமுறை நீட்டிக்கப்பட்டு வருவது அந்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!