அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – அரசின் சூப்பர் அறிவிப்பு!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் - அரசின் சூப்பர் அறிவிப்பு!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் - அரசின் சூப்பர் அறிவிப்பு!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – அரசின் சூப்பர் அறிவிப்பு!

தமிழக அரசு மக்களுக்கு அறிவிக்கும் நலத்திட்டங்கள் அனைத்தும் சிறந்த முறையில் மக்களை சென்றடைவதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவை அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது அந்த வகையில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அரசின் அறிவிப்பு:

தமிழகத்தில் கடந்த ஆண்டு திமுக தலைமையிலான புதிய ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அரசின் அனைத்து துறைகளிலும் அதிரடியாக பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அரசின் திட்டங்கள் அனைத்தும் மாநிலத்தின் கடைக்கோடி கிராமங்களில் வசிக்கும் மக்கள் வரையில் முறையாக சென்றடைய வேண்டும் என்று அரசின் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கும் உத்தரவிட்டார். மேலும், இவை அனைத்தும் நேரடியாக தனது மேற்பார்வையில் நடக்கும் என்றும் தெரிவித்தார்.

இதனால் அரசின் பணிகள் அனைத்தும் தகுதியான மக்களுக்கு முறையில் சென்றடைகிறது. இதற்காக அவ்வப்போது துறைசார்ந்த மாற்றங்களும், புதிய விதிகளும் நடைமுறை படுத்தப்படுகின்றது. அதன்படி, அதிக மாற்றங்களை சந்தித்தது பொது விநியோகத்துறை தான். அதிலும், மக்களுக்கு அரசின் பல நலத்திட்டங்களை நேரடியாக கொண்டு சேர்க்கும் ரேஷன் கடைகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு மற்றும் அது சார்ந்த புகார்களும் மக்களிடம் பெறப்பட்டது. அதன் அடிப்படையில், அரசு மாற்றங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

மேலும், ரேஷன் கடைகள் அனைத்தும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் சக்கரபாணி உத்தரவிட்டுள்ளார். உணவுப்பொருட்கள் கீழே சிந்துவதை தவிர்க்க வேண்டும் என்றும், அவ்வாறு கீழே விழும் பொருட்களை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும் என்றும், அவற்றை மக்களுக்கு விநியோகிக்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் சக்கரபாணி நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், இனி அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை போன்ற பொருட்கள் அனைத்தும் இனி பாக்கெட்டுகளில் வழங்க திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!