Airtel வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. 5ஜிபி இலவச டேட்டா – முழு விவரம் இதோ!

1
Airtel வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. 5ஜிபி இலவச டேட்டா - முழு விவரம் இதோ!
Airtel வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. 5ஜிபி இலவச டேட்டா - முழு விவரம் இதோ!
Airtel வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. 5ஜிபி இலவச டேட்டா – முழு விவரம் இதோ!

நாடு முழுவதும் மக்கள் பலர் ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்த தொடங்கியது முதல் பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ரீசார்ஜ் சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் முன்னணி நிறுவனமான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு 5 ஜிபி இலவச டேட்டா வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஏர்டெல் சலுகை:

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள அவ்வப்போது பல ரீசார்ஜ் சலுகைகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஜியோ மற்றும் Vi ஆகிய போட்டி நிறுவனங்கள் மத்தியில் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் 5 ஜிபி இலவச டேட்டா வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த சலுகை யாருக்கெல்லாம் பொருந்தும் என்பது குறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.

அதன் படி ஏர்டெல் வழங்கும் இந்த சலுகையானது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைப்பதில்லை. புதிய ஏர்டெல் ப்ரீபெய்ட் இணைப்பை வாங்குபவர்களுக்கு மட்டுமே இலவச டேட்டா வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சலுகையானது ஏர்டெல் தேங்க்ஸ் செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் புதிய சிம் வாங்கினால் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சலுகையின் படி 5 ஜிபி டேட்டாவும் முழுமையாக கிடைக்காது.

நாட்டில் தோன்றிய மற்றொரு ஆபத்தான வைரஸ் – தடுப்பூசிக்கும் பயப்படாது! எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்!

Exams Daily Mobile App Download

ஏர்டெல் புதிய சிம் வாங்கியவுடன் 1 ஜிபி டேட்டாவின் 5 கூப்பன்கள் வழங்கப்படும். அந்த 5 கூப்பன்களை 90 நாட்களுக்கு வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அது மட்டுமில்லாமல் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் சிம்மை வாங்க சொல்லி தனது நண்பர்களுக்கு பரிந்துரை செய்தால் அதற்கும் சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . அதற்கு அந்த நண்பர் புதிய ப்ரீபெய்டு சிம் இணைப்பைக் கிளிக் செய்து புதிய ஏர்டெல் ப்ரீபெய்டு சிம் கார்டை ஆர்டர் செய்ய வேண்டும். அப்படி செய்தால் இருவருக்கும் ரூ.100 தள்ளுபடி கூப்பன் கிடைக்கும். மேலும் ஏர்டெல் பயனர்களுக்கு 2GB டேட்டா சலுகை குறித்த அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. இந்த சலுகை ஏர்டெல் தேங்க்ஸ் செயலி மூலம் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே வழங்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!