ஆதார் கார்டு பயன்படுத்துவோருக்கு ஹாப்பி நியூஸ் – போட்டோவை மாற்றும் எளிய வழிமுறைகள்!

0
ஆதார் கார்டு பயன்படுத்துவோருக்கு ஹாப்பி நியூஸ் - போட்டோவை மாற்றும் எளிய வழிமுறைகள்!
ஆதார் கார்டு பயன்படுத்துவோருக்கு ஹாப்பி நியூஸ் – போட்டோவை மாற்றும் எளிய வழிமுறைகள்!

Aadhar Card தற்போது மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகி விட்டது. ஆதார் கார்டில் நம்முடைய பயோமெட்ரிக்ஸின் அங்கீகரிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் முக்கிய தனிப்பட்ட தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் புதிய புகைப்படத்தை மாற்ற செய்ய வேண்டிய வழிமுறைகளை பார்ப்போம்.

புகைப்படத்தை மாற்றம் செய்ய:

உங்கள் ஆதார் கார்டில் இருக்கும் உங்கள் தனிப்பட்ட விவரங்களில் ஏதேனும் மாற்றங்களை செய்ய விரும்பினால், நீங்கள் UIDAI-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு செல்லவும். அதில் உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண், புகைப்படம் மற்றும் இமெயில் ஐடி தொடர்பான தகவல்களை நீங்கள் அப்டேட் செய்து கொள்ளலாம். ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தை மாற்ற நீங்கள் ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டியதிருக்கும். இப்போது வீட்டில் இருந்த படியே புகைப்படத்தை மாற்ற பல வசதிகளை ஏற்படுத்தி உள்ளனர்.

ExamsDaily Mobile App Download

ஆதார் கார்டில் உள்ள போட்டோவை மாற்ற விரும்பினால், முதலில் UIDAI-வின் அதிகாரபூர்வ வெப்சைட்டான uidai.gov.in-விற்கு செல்லவும். பின்னர் ஆதார் என்ரோல்மென்ட் ஃபார்மை டவுன்லோட் செய்யவும். அதில் உள்ளவற்றை தேவையான அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்யவும். ஆதார் என்ரோல்மென்ட் சென்டருக்கு சென்று இந்த ஃபார்மை சமர்ப்பிக்கவும். அங்கே உங்களது புதிய புகைப்படத்தை எடுத்து கொள்ளலாம். இதற்கு ஜிஎஸ்டி-யுடன் சேர்த்து ரூ.100 செலுத்த வேண்டும்.

மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.39,100/-

அதன்பிறகு, உங்கள் விவரங்களை அங்கீகரிக்க நீங்கள் பயோமெட்ரிக்ஸை வழங்க வேண்டும். தொடர்ந்து நீங்கள் ஒப்புகை சீட்டு மற்றும் புதுப்பிப்பு கோரிக்கை எண்ணை பெறுவீர்கள். URN மூலம் உங்கள் ஆதார் கார்டில் செய்ய கோரி உள்ள அப்டேட்டை நீங்கள் கண்காணிக்கலாம். ஆதார் கார்டில் உங்களது புது போட்டோ உடனடியாக மாறிவிடாது. புது போட்டோ ஆதார் கார்டில் அப்டேட்டாக அதிகப்பட்சம் 90 நாட்கள் வரை ஆகலாம். உங்கள் ஆதார் கார்டில் நல்ல போட்டோ வேண்டும் என்றால் நீங்கள் நன்கு தயாராக இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here