ஆதார் கார்டு பயன்படுத்துவோருக்கு ஹாப்பி நியூஸ் – ஆன்லைனில் அப்டேட் செய்யும் வழிமுறைகள்!

0
ஆதார் கார்டு பயன்படுத்துவோருக்கு ஹாப்பி நியூஸ் - ஆன்லைனில் அப்டேட் செய்யும் வழிமுறைகள்!
ஆதார் கார்டு பயன்படுத்துவோருக்கு ஹாப்பி நியூஸ் - ஆன்லைனில் அப்டேட் செய்யும் வழிமுறைகள்!

ஆதார் கார்டு பயன்படுத்துவோருக்கு ஹாப்பி நியூஸ் – ஆன்லைனில் அப்டேட் செய்யும் வழிமுறைகள்!

இந்தியாவில் தனிநபர் அடையாள அட்டைகளில் ஒன்றாக ஆதார் கார்டு உள்ளது. தற்போது அனைத்து சேவைகளிலும் ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும். அதனால் ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டும். ஏதேனும் தவறு இருப்பின் அதனை ஆன்லைன் முறையில் மாற்றி கொள்ளலாம். இதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

ஆதார் கார்டு

இந்தியாவில் தனிநபர் அடையாள ஆவணங்களில் ஆதார் கார்டு முக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும் தற்போது பல்வேறு சேவைகளிலும் ஆதார் கார்டு இன்றியமையாததாக உள்ளது. தற்போது ஆதார் கார்டு மூலமாக வங்கிகளில் டிஜிட்டல் முறையில் பணத்தை பெற முடிகிறது. இதையடுத்து அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் ஆதார் கார்டு மூலமாக செயற்படுத்தப்படுகிறது. அத்துடன் முக்கிய வேலைகளுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் ஆதார் கார்டில் உள்ள தங்களின் விவரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

மேலும் ஏதேனும் தவறு இருப்பின் இது எதிர்காலத்தில் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தலாம். அதனால் தங்களின் விவரங்களை சரியாக வைத்திருப்பது மிகவும் அவசியமானதாகும். இப்போது தங்களின் ஆதார் கார்டில் ஏதேனும் தவறு இருந்தால் அதனை சுலபமாக ஆன்லைன் முறையில் மாற்றலாம். மேலும் ஆதார் கார்டில் பல ஆண்டுகளுக்கு முன்னால் எடுத்த புகைப்படம் இடம்பெற்றிருக்கும். இதனையும் தற்போது மாற்றுவதற்கு UIDAI வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது போன்று தங்களின் முகவரி, போன் நம்பர், பிறந்த தேதி உள்ளிட்டவைகளில் ஏதேனும் தவறு இருந்தாலும் மாற்றி கொள்ளலாம்.

Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முழு விபரங்கள் இதோ!

ஆதார் கார்டில் விவரங்களை மாற்ற வழிமுறைகள்

1. இதற்கு முதலாவதாக https://uidai.gov.in/ என்ற யுஐடிஏஐ இணையதளத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. இதில் தங்களின் விருப்ப மொழியை தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போது ஆதார் சேவை பிரிவில், சுய சேவை புதுப்பிப்பு விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

3. இப்போது 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். இதையடுத்து கேப்ட்சா பாதுகாப்பு குறியீட்டை சரியாக உள்ளிட வேண்டும்.

4. அடுத்ததாக ஓடிபி உருவாக்கு என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இப்போது புதிய பக்கம் தோன்றும். அதில் தரவைப் புதுப்பி பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.

5. இப்போது உங்களின் சரியான விவரங்களை உள்ளிட வேண்டும். அதன் பின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP எண் அனுப்பப்படும். மேலும் இது போன்ற அனைத்து விவரங்களையும் புதுப்பித்து கொள்ளலாம்.

6. இந்த OTP எண்ணை உள்ளிட்டு “தொடரவும்” என்பதை கிளிக் செய்ய வேண்டும். இறுதியாக தங்களின் சரியான விவரங்கள் புதுப்பிக்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!