ஆதார் அட்டை வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – கார்டில் சிக்கலா? மாற்றம் செய்ய இந்த 4 நம்பர் போதும்!

0
ஆதார் அட்டை வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் - கார்டில் சிக்கலா? மாற்றம் செய்ய இந்த 4 நம்பர் போதும்!
ஆதார் அட்டை வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் - கார்டில் சிக்கலா? மாற்றம் செய்ய இந்த 4 நம்பர் போதும்!
ஆதார் அட்டை வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – கார்டில் சிக்கலா? மாற்றம் செய்ய இந்த 4 நம்பர் போதும்!

ஆதார் அட்டை அனைத்து முக்கிய விவகாரங்களுக்கும் தேவைப்படும் மிக முக்கியமான ஒரு அட்டையாக மாறி விட்டது. அத்தகைய முக்கிய தகவல்களை கொண்ட ஆதாரில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், இப்போது தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு அதைத் தீர்க்கலாம்.

ஆதார் சேவை எண்:

இந்தியாவில் ஆதார் அட்டை என்பது அனைவருக்கும் மிக முக்கியமான ஆவணம். இப்போதெல்லாம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது . மேலும் அரசு திட்டங்களையும் பயன்படுத்திக் கொள்ள ஆதார் அட்டை (Aadhaar) அவசியம். இந்நிலையில், ஆதார் அட்டை இல்லாமல் எந்த முக்கியமான வேலையும் செய்ய முடியாது என்ற நிலைக்கு வந்து விட்டோம். ஆதார் கார்டை வைத்து வங்கிகளில் கடன் கூட வாங்கலாம்.

Exams Daily Mobile App Download

மேலும் UIDAI தற்போது அனைத்து வசதிகளையும் ஆன்லைனில் வழங்குகிறது. ஆதார் அட்டையில் பெயரை மாற்றுவது முதல் தொலைபேசி எண் மாற்றுவது அல்லது வீட்டு முகவரியை மாற்றுவது போன்ற அனைத்து தீர்வுகளையும் ஆன்லைனில் பெறலாம். இந்நிலையில் தனிநபரின் இன்றியமையாத ஒரு ஆவணமாக உள்ள இந்த ஆதார் கார்டில் ஏதேனும் பிரச்சினையோ , புகாரோ இருந்தால், நாம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என திணற வேண்டாம். அதற்கு ஆதார் பயனாளர்கள் 1947 என்ற இலவச எண்ணை டயல் செய்வதன் மூலம் அனைத்து பிரச்சினைக்கும் ஒரே போன் காலில் தீர்வு காணலாம். இந்த நம்பரின் முக்கியம்சம் என்னவென்றால், 12 வெவ்வேறு மொழிகளில் உதவுகிறது தான்.

UIDAI வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘ஆதார் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் இனி ஒரே தொலைபேசி அழைப்பின் மூலம் கையாளப்படும்’, ஆதார் ஹெல்ப்லைன் 1947 இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம், பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, ஒரியா, பெங்காலி, அஸ்ஸாமி மற்றும் உருது ஆகிய மொழிகளில் கிடைக்கிறது.இதுவொரு டோல் ஃபிரீ நம்பர் தான். வாரத்தின் ஏழு நாட்களும், வருடத்தின் 365 நாட்களும் இந்த நம்பருக்கு அழைக்கலாம். காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த நம்பருக்கு அழைத்து தீர்வு பெறலாம். ஆதார் கார்டு பதிவு ஸ்டேட்டஸ் உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் பொதுமக்கள் இந்த நம்பர் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!