ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி வீட்டில் இருந்தபடியே அப்டேட் செய்யலாம்!

0
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இனி வீட்டில் இருந்தபடியே அப்டேட் செய்யலாம்!
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இனி வீட்டில் இருந்தபடியே அப்டேட் செய்யலாம்!
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி வீட்டில் இருந்தபடியே அப்டேட் செய்யலாம்!

நாடு முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் ஆதார் அப்டேட் சேவையை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் விதமாக ஒன்றிய அரசு புதிய முயற்சியை எடுக்கவுள்ளது. அதாவது ஆதார் அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் தபால்காரர்களுக்கு பயிற்சி அளித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் பயிற்சிக்குப் பிறகு, தபால்காரர்கள் பொதுமக்கள் வீட்டிற்கே வந்து ஆதார் சேவைகளை வழங்குவார்கள்.

ஆதார் சேவைகள்:

இந்தியாவில் அனைவருக்குமான அடையாள அட்டையாக ஆதார் அட்டை உள்ளது. பயோமெட்ரிக் விவரங்கள் அடங்கிய உலக அளவில் மிகப்பெரிய அடையாள அட்டை அமைப்பாக ஆதார் ஆணையம் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் ஆதார் கார்டு வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் முகவரி போன்ற விவரங்களை ஆன்லைனில் மாற்றுவதற்கான ஆப்ஷனை UIDAI வழங்குகிறது. இருப்பினும் தொலைபேசி எண் அப்டேட்ஸ் அல்லது பயோமெட்ரிக் விவரங்களில் மாற்றங்கள் போன்றவற்றுக்கு யூஸர்கள் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு தான் செல்ல வேண்டும்.

அறிவுரை சொன்ன தனம், கேட்க மறுக்கும் கதிர் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் அடுத்து வருபவை!

இந்நிலையில் தான் ஆதார் அப்டேட் ப்ராசஸை எளிதாக செய்ய UIDAI அமைப்பானது இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்கில் பணிபுரியும் சுமார் 48,000 தபால்காரர்களுக்கு (postmen) சிறப்பு பயிற்சி அளித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சிறப்பு பயிற்சியை முடிந்த பிறகு ஆதார் கார்டில் மாற்றங்களை செய்ய விரும்பும் குடிமக்களின் வீட்டிற்கே சென்று வீட்டு வாசலில் ஆதார் அப்டேட் சர்விஸ்களை பயிற்சி பெற்ற தபால்காரர்கள் வழங்குவார்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

ஊடக அறிக்கைகளின் படி இந்த பணிகளில் ஈடுபட உள்ள தபால்காரர்கள் டிஜிட்டல் கேஜெட்ஸ, டெஸ்க்டாப் அல்லது லேப்டாப் அடிப்படையிலான தகுந்த டிஜிட்டல் உபகரணங்களுடன் கூடிய ஆதார் கிட் கொண்டிருப்பார்கள். மேலும் சிறப்பு பயிற்சி பெறும் தபால்காரர்கள் குழந்தைகளும் ஆதார் கார்டுகளை பெறும் வகையில் ஆதார் எண் வழங்குவதற்காக குழந்தைகளை பதிவு செய்யும் பணியிலும் ஈடுபடுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் 755 மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் Aadhaar Sewa Kendra-வை திறப்பதை UIDAI நோக்கமாக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!