தமிழக கல்லூரி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – Hall Ticket வெளியீடு!!

0
தமிழக கல்லூரி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு - Hall Ticket வெளியீடு!!
தமிழக கல்லூரி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு - Hall Ticket வெளியீடு!! தமிழக கல்லூரி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு - Hall Ticket வெளியீடு!!
தமிழக கல்லூரி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – Hall Ticket வெளியீடு!!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காமராஜர் பல்கலைக்கழகத்தின் UG Supplementary Examination தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் மாணவர்களுக்கிடையே கற்றல் பாதிப்பு ஏற்படக்கூடாது என பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கான தேர்வானது நேரடி முறையில் நடத்தப்படாமல் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தாமதமாக வகுப்புகள் தொடங்கப்பட்டதால் நேரடி முறையில் தேர்வுகள் நடத்தக்கூடாது என மாணவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். அதன்படி கடந்த ஆண்டும் ஆன்லைன் முறையிலே செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றது. இதையடுத்து கொரோனா பரவல் குறைய தொடங்கியதை தொடர்ந்து அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதனால் கடந்த 2022ம் ஆண்டு நேரடி முறையில் தேர்வுகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி கடந்த 2022ம் ஆண்டில் மார்ச் – ஏப்ரல் மாதம் நடைபெற்ற கல்லூரி தேர்வுகள் நேரடி முறையில் நடைபெற்றது.

பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து – நாளை மறுநாள் வகுப்புகள் துவக்கம்!

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் (2022-23) அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் வழக்கம் போல நேரடி முறையில் வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. இதையடுத்து தற்போது காமராஜர் பல்கலைக்கழகத்தின் UG Supplementary Examination (CBCS) – July 2022(B.A / B.B.A / B.Litt / B.Sc / B.Com) தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான Hall Ticket பெற விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்து உங்களின் Register Number-ஐ உள்ளிட வேண்டும். அதன்பின்பு Captcha குறியீடை கொடுத்து சமர்ப்பிக்க வேண்டும். இப்போது உங்களின் Hall Ticket-ஐ பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம்.

Download Hall Ticket

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!