
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் நடக்கும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் இன்று மதியம் 2 மணியளவில் ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொதுத் தேர்வு:
கடந்த இரண்டு வருட காலமாக கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. கொரோனா அச்சம் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன. ஆன்லைன் மூலம் பாடங்களை முடிக்க முடியாத காரணத்தினால் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா குறைந்து வந்த நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. மேற்கொண்டு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இந்த வருடம் கண்டிப்பான முறையில் தேர்வுகள் நடத்தப்படும் என கூறி இருக்கிறார்.
தமிழகத்தில் இலவச கல்வி திட்ட மாணவர் சேர்க்கை – இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு!
அதன்படி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதியும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9 ஆம் தேதியும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6 ஆம் தேதியும் தொடங்குகிறது எனவும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் கடந்த மார்ச் 9 ஆம் தேதி முதல் மார்ச் 16 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.
மே மாதம் பொதுத் தேர்வு நடக்க இருக்கும் நிலையில் 10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என போன மாதம் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதனடிப்படையில் இன்று (20.04,202) ஹால் டிக்கெட் வெளியாகிறது. இன்று பிற்பகல் 2 மணி முதல் http://dge.tn.gov.in இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.