தமிழகத்தில் அரையாண்டு விடுமுறையில் மாற்றம் – அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன??

0
தமிழகத்தில் அரையாண்டு விடுமுறையில் மாற்றம் – அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன??

அரையாண்டு தேர்வுக்கான தேதி மாற்றயமைக்கப்பட்டுள்ள நிலையில் அரையாண்டு விடுமுறையில் மாற்றம் இருக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.

அரையாண்டு விடுமுறை:

தமிழகத்தில் 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 11ம் தேதி துவங்கி 21ம் தேதியும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 7ஆம் தேதி துவங்கி 22ம் தேதி வரையிலும் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், மிக்ஜாம் புயலின் காரணமாக அரையாண்டுத் தேர்வில் மாற்றம் அறிவிக்கப்பட்டு டிச.7 மற்றும் 8ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிச.14, 20ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 – 5ம் வகுப்பு மாணவர்களுக்கான பருவத்தேர்வு – கல்வித்துறை பிறப்பித்த அதிரடி தடை!

அதே நேரத்தில், தீவிர புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் திங்கட்கிழமையில் இருந்து தற்போது வரையிலும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்த தொடர் விடுமுறை மற்றும் அரையாண்டுத் தேர்வில் மாற்றம் அறிவிக்கப்பட்டதனால் அரையாண்டு விடுமுறை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், தற்போது வரையிலும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரையாண்டு விடுமுறை குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. வேலை நாட்களை சரிக்கட்டும் பொருட்டு அரையாண்டு விடுமுறை குறைக்கப்படுமா அல்லது அதே விடுமுறை அறிவிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!