நாளை (ஏப்ரல் 4) முதல் அரைநாள் மட்டுமே பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல செயல்பட தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ஆந்திராவில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. அதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை அம்மாநில முதல்வர் வெளியிட்டுள்ளார்.
மாணவர்கள் கவனத்திற்கு
இந்தியா முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்ப்படுத்தப்பட்டது. அத்துடன் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் கடந்த 2 ஆண்டுகளாக விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளது. அதனால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. அத்துடன் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்பட தொடங்கியுள்ளது. அத்துடன் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
இந்த ஆண்டு பல்வேறு மாநிலங்களில் பொதுத்தேர்வு நடத்துவதற்கான தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மாநிலங்களில் பொதுத்தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. பொதுவாக மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஏப்ரல் மாதத்தில் நடத்தி முடிக்கப்பட்டு மாணவர்களின் நலன் கருதி மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு நேரடி வகுப்புகள் தாமதமாக தொடங்கியதால் சில மாநிலங்களில் பொதுத்தேர்வு மே மாதம் இறுதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மேலும் பல மாவட்டங்களில் 40 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதோடு அனல் காற்று வீசி வருவதால் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்வதில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அதனால் மாணவர்களின் நலன் கருதி 4ம் தேதி முதல் ஒருவேளை மட்டுமே பள்ளிகள் செயல்பட வேண்டும் என்று ஆந்திர மாநிலக் கல்வித்துறை அமைச்சர் ஆதிமூலப்பு சுரேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி திங்கட்கிழமை முதல் காலை 7.30 முதல் 11.30 வரை மட்டும் பள்ளிகள் இயங்கும் என்று திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.