தேர்வு இல்லாமல் ரூ.51,570 ஊதியத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க முந்துங்கள்!

0

தேர்வு இல்லாமல் ரூ.51,570 ஊதியத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க முந்துங்கள்! ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் குறிப்பிட்ட பணியிடங்களுக்கு 3 காலியிடம் உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கான அனைத்து விவரங்களும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

HAL வேலைவாய்ப்பு:

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Visiting Consultant(Ophthalmology, Radiology), Part Time Doctor (Ophthalmology)  ஆகிய பணிகளுக்கு 3 காலியிடங்கள் உள்ளது. HAL நிறுவனத்தின் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க பணியாளர்கள்  அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி உடன் MS/ MD/ DNB / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பாக, visiting Consultant(Ophthalmology, Radiology), Part Time Doctor (Ophthalmology) பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 65 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1 முதல் 7 ஆண்டுகள் பணியில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Visiting Consultant (Ophthalmology) பணிக்கு ஒரு வருகைக்கு ரூ.5000/-மும், Part Time Doctor (Ophthalmology) பணிக்கு ரூ.51,570/- மாத ஊதியம் அளிக்கப்படும்.

Visiting Consultant(Ophthalmology, Radiology), Part Time Doctor (Ophthalmology)  ஆகிய பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். Part Time Doctor (Ophthalmology) பணிக்கு அக்டோபர் 28 ம் தேதியும், Visiting Consultant (Ophthalmology) பணிக்கு  31.10.2022 தேதியும் இறுதி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், Visiting Consultant (Radiologist) பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள படி விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என்று விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!