HAL இந்தியா நிறுவனத்தில் ஒரு வருகைக்கு 5 ஆயிரம் ரூபாய் ஊதியம் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!

0

HAL இந்தியா நிறுவனத்தில் ஒரு வருகைக்கு 5 ஆயிரம் ரூபாய் ஊதியம் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL India) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Visiting Consultant (Anaesthesiology) பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், Visiting Consultant (Anaesthesiology) பணிக்கு என்று ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையங்களில் Anaesthesiology பாடப்பிரிவில் MBBS உடன் DNB / MS போன்ற டிகிரி முடித்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 10 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் இதில் Teaching அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.06.2022 ம் தேதியின் 65 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தேர்வாகும் பணியாளர்கள் ஒரு வருகைக்கு ரூ.5,000/- ஊதியம் பெறுவார்கள். மேலும் இத்துடன் வழங்கப்படும் கூடுதல் தொகை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 21.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!