மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் முழு ஊரடங்கு – மாநில அரசு அறிவிப்பு!!
கர்நாடகா மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவுவதால் அங்கு வாரத்தில் நான்கு நாட்களுக்கு முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.
முழு ஊரடங்கு
கொரோனா பரவலின் இரண்டாம் அலை நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக மாநிலங்கள் தோறும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் படி கர்நாடகா மாநிலத்திலும் நோய் கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 27ஆம் தேதி முதல் இரண்டு வார முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
முன்னதாக மருத்துவ நிபுணர்களின் அறிவுரைப்படி மே மாதம் 12 ஆம் தேதிக்கு பிறகு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தலாம் என மாநில அரசு ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து ஹாசன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் கோபாலய்யா, எம்எல்ஏக்கள் மற்றும் பிற அதிகாரிகளுடன் நேற்று (மே 5) ஆலோசனை நடத்தினார்.
முதுநிலை ஆயுஷ் நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!!
தொடர்ந்து அவர் கூறுகையில், கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதன் படி திங்கள், புதன், வெள்ளி போன்ற கிழமைகளில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை முழு ஊரடங்கு விதிக்கப்படவுள்ளது. தவிர இந்த நாட்களில் வர்த்தக நடவடிக்கைகளுக்கு அனுமதி உண்டு. தொடர்ந்து வாரத்தின் மற்ற நான்கு நாட்களில் பால், மருந்து கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும். இதற்கு ஹாசன் மாவட்ட மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.