அரசு ஊழியர்கள் & ஓய்வூதியதரர்களுக்கு 4% DA உயர்வு – அரசு அறிவிப்பு!

0
அரசு ஊழியர்கள் & ஓய்வூதியதரர்களுக்கு 4% DA உயர்வு - அரசு அறிவிப்பு!

குஜராத் மாநில அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் வழங்க முடிவு செய்துள்ளது.

அகவிலைப்படி உயர்வு

குஜராத் மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதரர்களுக்கு 4% அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் உயர்வை அறிவித்துள்ளது. அது மட்டுமில்லாமல் மாநில அரசு தனது NPS பங்களிப்பை 4 சதவீதம் உயர்த்தவும், இனிமேல் 7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் LTC பண மாற்றத்தைக் கணக்கிடவும் முடிவு செய்துள்ளது.

TN TET தேர்வுக்கான முக்கிய அறிவிப்பு – ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு!

ஏற்கனவே மாநில அரசு ஊழியர்கள் 42 சதவீத அகவிலைப்படி உயர்வை பெற்று வரும் நிலையில் தற்போது இந்த அறிவிப்பால் 4% உயர்ந்து 46% அகவிலைப்படி பெற இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பில் வெளியாகி இருக்கிறது. மேலும் ஊழியர்களுக்கு 2023 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி கடைசியாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அது தவிர கடந்த எட்டு மாதங்களுக்கான நிலுவைத் தொகை வழங்கப்படும். இதன் மூலம் 4.45 லட்சம் மாநில அரசு ஊழியர்களும், 4.63 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!