ஜி.யு.போப் – வீரமா முனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்

0

ஜி.யு.போப் – வீரமா முனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்

ஜி.யு.போப்

  • ஜி.யு.போப்பின் பிறந்த இடம் எட்வர்டுதீவு (பிரான்சு)
  • ஜி.யு.போப்பின் பிறந்த ஆண்டு ஏப்ரல் 24, 1820
  • ஜி.யு.போப்பின் முழுப்பெயர் ஜியார்ஜ் யுக்னோபோப்
  • தமிழ் கற்பித்தவர் இராமானுஜ கவிராயர்
  • சென்னை சாந்தோம் பகுதியில் சமயப்பணி ஆற்றிய போப் பின்னர் சென்ற இடம் சாயர்புரம் (திருநெல்வேலி)
  • திருநெல்வேலி மாவட்டம் சாயர்புரத்தில் கல்விப் பணியும் சமயப்பணியும் போப் 1842 முதல் 1849 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
  • போப் தம் மனைவியுடன் மீண்டும் தமிழகம் வந்து சமயப் பணியாற்றிய இடம் தஞ்சாவூர் ஆகும்.
  • திருக்குறளை நாற்பதாண்டுகள் படித்துச் சுவைத்த போப். ஆதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 1886 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.
  • தமது எண்பத்தாறாம் அகவையில் 1990 ஆம் ஆண்டு திருவாசகத்தின் ஆங்கில மொழிப் பெயர்ப்பினை வெளியிட்டார்.
  • ஜி.யு.போப் இறுதிக் காலத்தில் புறப்பொருள் வெண்பாமாலை, புறநானூறு, திருவருட்பயன் திருவாசகம் முதலிய நூல்களையும் பதிப்பித்தார்.
  • தமிழ் செய்யுட் கலம்பகம் என்னும் நூலைத் தொகுத்தார்.
  • தமிழ் ஆங்கில அகராதி, ஆங்கிலம் – தமிழ் அகராதியை வெளியிட்டார்.
  • 1858 இல் உதகமண்டலத்தில் பள்ளியைத் தொடங்கி ஆசிரியராக பணியாற்றினார்.
  • இங்கிலாந்துப் பல்கலைக்கழகத்தில் தமிழ் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராக 1885 முதல் 1908 வரை பணிபுரிந்தார்.
  • Elementary Tamil grammer எனத் தமிழ் இலக்கணத்தை மூன்று பாகங்களாக எழுதினார்.
  • மணிமேகலைக் கதையை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
  • இங்கிலாந்து தேச சரித்திரம் எனும் சிறந்த உரைநடை நூலையும் எழுதியுள்ளார்.
  • Royal Asiatic Quarterly, The Indian Magazine போன்ற ஆங்கில இலக்கிய இதழ்களில் தமிழன் பெருமையை விளக்கும் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
  • ஜி.யு.போப் தம் இன்னுயிரை நீத்த ஆண்டு பிப்ரவரி 11, 1908.
  • தம் கல்லறையில் இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்று பொறிக்கப்பட வேண்டும் என்று போப் கூறியுள்ளது. இவரது தமிழ்ப் பற்றைத் தெளிவுபடுத்தும்.

வீரமாமுனிவர்

  • கான்ஸ்டான்டின் ஜோசப் பெஸ்கி பாதிரியார் எனும் வீரமாமுனிவர் இத்தாலியில் உள்ள கேசுலியோனில் 08.11.1680 ல் பிறந்தார்.
  • இவரது பெற்றோர் கொண்டல் போ பெஸ்கி மற்றும் எலிசபெத் கிறிஸ்துவ மதத்திற்கு ஊதியம் செய்ய 1710 இல் தமிழகம் வந்தார்.
  • ஆங்கிலம் எபிரேயம் கிரேக்கம் ஆகிய மொழிகளை அறிந்திருந்தாலும் தமிழ்மொழியின் பால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.
  • தமிழ்மொழிப் பற்றினால் தைரியநாதன் என்னும் தம் பெயரைத் தனித் தமிழாக்கி கொண்டார்.
  • தமிழ்மொழி பயின்றதோடு தெலுங்கு, வடமொழி முதலிய மொழிகளையும் கற்று தேர்ந்துள்ளார்.
  • மதுரையில் தங்கி சுப்ரதீபக் கவித்ராயரிடம் தமிழ் பயின்றார்.
  • தொன்னூல் விளக்கம் எனும் நூல் மூலம் எழுத்து, சொல், பொருள் யாப்பு அணி என தமிழுக்கு இலக்கணம் வகுத்தார்.
  • தமிழின் முதல் அகரமுதலி எனப்படும் சதுரகராதியை முதலில் வெளியிட்டவர்.
  • தேம்பாவணி என்னும் கிருத்தவர் காப்பியத்தை இயற்றியவர்.
  • தமிழ் எழுத்து வரிவடிவத்தை திருத்தி எழுத்துச் சீர்திருத்தம் செய்துள்ளார்.
  • திருக்குறளில் அறத்துப் பாலையும் பொருட்பாலையும் லத்தீன் மொழியில் மொழி பெயர்த்தார்.
  • “பரமார்த்த குரு கதை” வேத விளக்கம்: வேதியர் ஒழுக்கம் ஞானக் கண்ணாடி: செந்தமிழ் இலக்கணம் போன்ற நூல்களை இயற்றினார்.
  • திருக்காவலூர் கலம்பகம் கித்தேரி அம்மன் அம்மானை போன்ற காப்பியங்களையும் எழுதியுள்ளார்.
  • வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகிறார் என்று சொல்லின்; செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை கூறியுள்ளார்.
  • திராவிட மொழியியல் அறிஞர்களுள் முதன்மையானவராக விளக்கியுள்ளார்.
  • வீரமாமுனிவர் 04.02.1746 ஆம் ஆண்டு மறைந்தார்.

PDF Download

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

TNPSC Group 2 பாடக்குறிப்புகள் PDF Download

TNPSC Group 2 நடப்பு நிகழ்வுகள் PDF Download

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!