டிச.31 வரை கொரோனா மருந்துகளின் GST சலுகை நீட்டிப்பு – மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்புகள்!

0
டிச.31 வரை கொரோனா மருந்துகளின் GST சலுகை நீட்டிப்பு - மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்புகள்!
டிச.31 வரை கொரோனா மருந்துகளின் GST சலுகை நீட்டிப்பு - மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்புகள்!
டிச.31 வரை கொரோனா மருந்துகளின் GST சலுகை நீட்டிப்பு – மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்புகள்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பயன்படுத்தும் மருந்துகளுக்கான GST சலுகை விகிதங்கள் டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மருந்து சலுகை

இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிராக பயன்படுத்தப்படும் உயிர்காக்கும் மருந்துகளுக்கு GST விகிதங்களில் இருந்து விலக்கு அளித்து இந்த மாதம் 30 ஆம் தேதி வரை சலுகை கொடுக்கப்பட்டிருந்தது. இந்த சலுகையை வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இது தவிர பெட்ரோல் மற்றும் டீசல் விலையை சரக்கு மற்றும் சேவை வரி (GST)யின் கீழ் கொண்டுவர இது சரியான நேரம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக லக்னோவில் FM சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 45 வது GST கவுன்சில் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பேறுகால விடுப்பு அரசாணை விளக்கம்!

இந்த கூட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதில் GST வரிக்குள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வந்தால் விலை குறைக்கப்படும் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், பெட்ரோலிய பொருட்கள் ஒரே வரி விதிப்பில் சேர்க்கப்படுவதை விரும்பவில்லை என்று GST கவுன்சில் உறுப்பினர்கள் விளக்கம் அளித்துள்ளனர். தொடர்ந்து கொரோனா வைரஸ் தொடர்புடைய மருந்துகளுக்கான சலுகை GST விகிதங்கள் டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, தசைச் சிதைவுக்கு சிகிச்சையளிக்க மத்திய சுகாதார அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு IGST இலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சில உயிர்காக்கும் மருந்துகள் கொரோனா மருந்துகளுடன் இணைக்கப்படவில்லை. ஆனால் மிகவும் விலை உயர்ந்த Zolgngelsma மற்றும் Viltepso மருந்துகளுக்கு இப்போது GST யிலிருந்து விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. Amphotericin B – nil விகிதம், Tocilizumab – nil rate, Remdesivir – 5 சதவீதம், Heparin போன்ற ஆன்டிகோகுலண்டுகளுக்கு 5 சதவீதம் வரை விலக்கு அளிக்கப்படுகிறது.

இதற்கிடையில், டீசலுடன் கலப்பதற்காக எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பயோடீசல் மீதான GST விகிதம் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது தவிர பேனா பாகங்கள் மீதான GST விகிதத்தை 18 சதவீதமாக மாற்றுவதன் மூலம் இந்த தலைகீழ் சரி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. விமானம் அல்லது குத்தகைக்கு இறக்குமதி செய்யப்படும் பிற பொருட்களுக்கு GST செலுத்தப்படும்போது இரட்டை வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது உள்நாட்டு தொழில் மற்றும் விமானத் துறைக்கு உதவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Covaxin தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – WHO ஒப்புதல் தாமதம்!

தொடர்ந்து இந்தியா முழுவதும் அல்லது அடுத்தடுத்த மாநிலங்களில் சரக்கு வாகனங்களை இயக்க அனுமதி வழங்குவதற்காக, மாநிலங்கள் வசூலிக்கும் தேசிய அனுமதி கட்டணம் GSTயிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கப்பல்கள் மற்றும் விமானம் மூலம் ஏற்றுமதி பொருட்களின் போக்குவரத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவை திட்டங்களில் பயன்படுத்தக்கூடிய வலுவூட்டப்பட்ட அரிசி தானியங்களுக்கான GST விகிதம் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!