TNPSC குரூப் – 4 இரண்டாம் கட்ட கலந்தாய்வு (ம)சான்றிதழ் சரிபார்ப்பு – தேதி அறிவிப்பு !

0
TNPSC குரூப் - 4 இரண்டாம் கட்ட கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு - தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு!
TNPSC குரூப் - 4 இரண்டாம் கட்ட கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு - தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு!
TNPSC குரூப் – 4 இரண்டாம் கட்ட கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு – தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு போன்றவை பற்றிய முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

குரூப் – 4 பணியிடங்கள்:

கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக கடந்த ஆண்டு முதல் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முக்கிய தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது தொற்று பரவல் நிலை சீரடைந்துள்ளதால் TNPSC போட்டித் தேர்வுகளை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. மேலும், தேர்வுகள் முடிந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்புகளையும் விரைவில் வெளியிட இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், குரூப் – 4 தேர்வர்களுக்கான புதிய அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

முன்னணி நிறுவனங்களின் ரூ.1,000 கீழ் உள்ள பிராட்பேண்ட் பிளான்கள் – முழு விவரம் இதோ!

குரூப் – 4 தகுதியின் கீழ் உள்ள கிராம நிா்வாக அதிகாரிகள், இளநிலை உதவியாளா்கள், தட்டச்சா் போன்ற 7 வகையான பணியிடங்களுக்கு கடந்த 2019 ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி தேர்வுகள் நடத்தப்பட்டது. தேர்வின் முடிவுகள் 2019 நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. தொடர்ந்து இந்த பணியிடங்களின் எண்ணிக்கை 9,882 ஆக அதிகரித்தது. இந்நிலையில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 2020 பிப்ரவரி 19ம் தேதி முதல் மார்ச் 17ம், தேதி வரை கலந்தாய்வு நடத்தப்பட்டது. முதல் கட்ட கலந்தாய்வின் பொது மொத்தம் 5,798 பணியிடங்கள் நிரப்பப்பட்டது. ஆனால் 209 இளநிலை உதவியாளா் பணியிடங்கள் நிரப்பவில்லை.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

இன்னும், இளநிலை உதவியாளா்கள், தட்டச்சா்கள் போன்ற பணியிடங்களுக்கான 430 காலியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படாமல் இருந்தது. தற்போது இளநிலை உதவியாளர், நில அளவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான காலியிடங்களின் இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் அக்டோபர் 11 மற்றும் 12 தேதிகளில் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வில் பங்கேற்க தவறினால் மறுவாய்ப்பு வழங்கப்படாது என்றும், கலந்தாய்வு தொடர்பான தற்காலிக பட்டியல் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Official Notice 2021

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!