TNPSC குரூப் 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு – அரசு வழங்கிய பாடக்குறிப்பு! பதிவிறக்கம் செய்வது எப்படி?

0
TNPSC குரூப் 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு - அரசு வழங்கிய பாடக்குறிப்பு! பதிவிறக்கம் செய்வது எப்படி?
TNPSC குரூப் 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு - அரசு வழங்கிய பாடக்குறிப்பு! பதிவிறக்கம் செய்வது எப்படி?
TNPSC குரூப் 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு – அரசு வழங்கிய பாடக்குறிப்பு! பதிவிறக்கம் செய்வது எப்படி?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4, VAO தேர்வுகள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற இருக்கும் நிலையில் இத்தேர்வுக்கு தயாராகுபவர்கள் அதற்கான ஸ்டடி மெட்டீரியல்களை பதிவிறக்கம் செய்து கொள்ள சில எளிய வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

TNPSC தேர்வு

ஒவ்வொரு ஆண்டும் அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சில போட்டித்தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் குரூப் 1 முதல் குரூப் 4 வரையுள்ள அனைத்து போட்டித்தேர்வுகளையும் நடத்தும் TNPSC வாரியம், இதன் மூலம் காலிப்பணியிடங்களை நிரப்பும் பணிகளை மேற்கொள்கிறது. இப்படி இருக்க கடந்த ஆண்டு முதல் நிலவி வரும் கொரோனா பரவல் காரணமாக TNPSC போட்டித்தேர்வுகள் அனைத்தும் இடை நிறுத்தி வைக்கப்பட்டது.

சபரிமலை தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!

இதனால் அரசு வேலைக்காக காத்திருந்த விண்ணப்பதாரர்கள் பலர் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள். இதனை கருத்தில் கொண்ட தமிழக அரசு வரும் 2022ம் ஆண்டில் TNPSC தேர்வுகளை நடத்துவதற்காக வருடாந்திர தேர்வு கால அட்டவணையை சமீபத்தில் வெளியிட்டது. இதில் 11,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை பெற்றிருக்கும் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புகள் வெளியானதை தொடர்ந்து பலரும் மும்முரமாக தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இப்போது TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்காக அரசு சில ஸ்டடி மெட்டீரியல்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. அந்த வகையில் குரூப் 4 தேர்வுக்கான ஸ்டடி மெட்டீரியல்களை  For Study Materials – Click இணையதளம் மூலம் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

இந்த ஸ்டடி மெட்டீரியல்களில் ஆட்டிடியூட், விலங்கியல், இயற்பியல், வேதியியல், இந்தியன் பாலிட்டி, இந்திய தேசிய இயக்கம், தமிழ் பகுதி உரைநடை, தமிழ் பகுதி 2, இந்திய பொருளாதாரம், வரலாறு உள்ளிட்ட பல்வேறு பாடங்கள் PDF வடிவில் இடம்பெற்றுள்ளது. இது தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட 2 மொழிகளிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் TNPSC குரூப் 4 தேர்வர்கள் இந்த ஸ்டடி மெட்டீரியல்களை பதிவிறக்கம் செய்து பயனடையும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!